இசையுடன் கலந்த சமுதாய, தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள்

எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் கவிதைகளை மனனம் செய்து கித்தார் இசையுடன் 10 கவிஞர்கள் வாசித்த கவிப்பெருக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.

எஸ்பிளனேட் அரங்கில் கித்தார் இசை ஒலிக்க, பத்துக் கவிஞர்கள், ஆளுக்கொரு கவிதையை எழுதி மனனம் செய்து அதனை வாசித்தனர்.

அழகப்பன் மெய்யப்பனின் ‘வெள்ளந்தி மனிதனின் சாதனை’, பானு சுரேஷின் ‘உண்மை என்றால் என்ன?’, கணேஷ் நாராயணனின் ‘வழியா இல்லை பூமியில்’, இராஜேஷ் குமார் தர்மலிங்கத்தின் ‘ஆதலினால் காதல் செய்வீர்’, தமீம் அன்சாரியின் ‘நீருக்கு யார் நீரென்று பெயர் வைத்தது’, வெண்ணிலாவின் ‘போராட்டம்’, லலிதா சுந்தரின் ‘நிறம் தானா எல்லாம்?’, சுவேதா முத்துவின் ‘இளைஞர்களின் சவால்’, பா. கங்காவின் ‘இசை’ ஆகிய கவிதைகள் இடம்பெற்றன.

அத்துடன், இராஜேஷ் குமார் தர்மலிங்கம், வெண்ணிலா ஆகியோர் எழுதிய ‘தமிழ் நம் அடையாளம்’ என்ற கவிதையை இராம் குமார், இராஜேஷ் குமார் மற்றும் மாணவி மௌலி ஷாரிணி ஆகியோர் படைத்தனர்.

“இசையில் தோய்த்த தேன் தமிழ்க் கவிதைப் பேச்சினால் கவிஞர்கள் தங்களுள் தனியுலக அனுபவங்களையும் பார்வையாளர்களிடம் பகிரும் வாய்ப்பை வழங்குவது இந்நிகழ்ச்சியின் நோக்கம்,” என்று அதன் ஏற்பாட்டாளர் இராஜேஷ் குமார் தர்மலிங்கம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

கித்தார் வாசித்த கலைஞர் ஈசுரு விஜயசோம, தமிழ் தெரியாதவர் என்றாலும் கவிதைகளின் உணர்வுகளைப் புரிந்து அவற்றைத் தம் இசைத்திறத்தால் எதிரொலித்தார்.

நீரை மனிதருக்கு உவமையாகத் தம் கவிதையில் விளக்கிய தமீம் அன்சாரி, இசையுடன் இணைந்து கவிதை வாசித்தது மாறுபட்ட அனுபவமாக அமைந்ததாகக் கூறினார். “நீர் மேலாண்மை, சுற்றுப்புறம் பற்றிய தலைப்பு எனக்குப் பிடித்திருந்ததால் அந்தத் தலைப்பைத் தெரிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

நீரை விரயம் செய்யாமல் அதனைச் சேமிக்கும் அவசியத்தை போதிக்கும் இந்தக் கவிதையை நிகழ்ச்சிக்கு 60 நாள்களுக்கு முன்னால் எழுதி தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டி இருந்ததையும் குறிப்பிட்டார்.

‘வழியா இல்லை பூமியில்’ என்ற கவிதையை எழுதிய கணேஷ் நாராயணன், 53, முன்னேற்றத்திற்குத் தடையானவற்றை இளையர்கள் எப்படிப் படிக்கற்களாக மாற்றியுள்ளனர் என்பதைப் பற்றி எழுதியதாகக் குறிப்பிட்டார். “கவிதை எழுதுவது எப்படி ஒரு கலையோ, கவிதையைக் குரலில் சரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பொருத்தமான ஏற்ற இறக்கத்துடன் வாசித்து அதற்கேற்ற முகபாவத்தையும் கை அசைவுகளையும் காண்பிப்பதும் கலைதான்” என்றார் இணையப் பாதுகாப்புப் பொது மேலாளரான திரு கணேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!