விபத்து

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கொல்லப்பட்ட லாரி விபத்து குறித்த விசாரணையில், “லாரி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஜிபிஎஸ்-ஐ பார்த்தேன். அப்போது, கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது” என்று லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் பேருந்து திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சேலம்: மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சோகச் சம்பவம் சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழ்ந்தது.
லண்டன்: டைட்டானிக் கப்பலின் ஆகப் பணக்காரப் பயணி என்று கருதப்பட்டவரின் உடலிலிருந்து கிடைத்த தங்கக் கடிகாரம், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த ஏலத்தில் 1.17 மில்லியன் பவுண்டுக்கு (S$2 மில்லியன்) விலைபோனது.
மைசூர்: பெங்களூருவின் சின்னப்பனஹள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் தாக்கி மூன்று இளையர்கள் உயிரிழந்தனர்.