சாங்கி விமான நிலையம்

சாங்கி விமான நிலையம் முனையம் 2ல், 2028ஆம் ஆண்டுக்குள் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கான முதல் பெரிய கட்டுமான ஒப்பந்தப்புள்ளி சாங்கி விமான நிலையக் குழுமத்தால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்துக்கு இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 16.5 மில்லியன் பயணிகள் வந்துசென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் எட்டு பேர் மீதும் ஏழு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு, $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடங்களின் கூரைகள், விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் ஒதுக்கப்பட்டுள்ள வான்வெளிக்களம், சரக்குக்கிடங்குகள் ஆகியவற்றில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படுகின்றன.