போலிஸ் கையை முறித்த கஞ்சா வியாபாரி கைது; ரூ.20 லட்சம் மீட்பு

வாணி­யம்­பாடி: கள்­ளச் சாரா­யம், கஞ்சா வியா­பா­ரத்தை குடும்­பத் தொழி­லாக செய்­து­வந்­துள்ள மகேஸ்­வரி என்ற பெண், அவ­ரது வீட்­டில் சோதனை நடத்த வந்த பெண் போலி­சாரை தூக்கிப் போட்டு பந்­தாடி அவ­ரது கையை முறித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து கார், புல்­லட், ஸ்கூட்­டர் என வாணி­யம்­பா­டி­யில் ஒரு குட்டி தாதா போல வலம் வந்த கஞ்சா வியா­பாரி மகேஸ்­வரி யையும் அவ­ரது கண­வர் உள்­ளிட்ட 7 பேரை­யும் துப்­பாக்கி முனை­யில் போலி­சார் கைது செய்­த­னர்.

மகேஸ்­வ­ரி­யின் வீட்­டிற்­குள் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 21 கிலோ கஞ்­சா­வை­யும் பானை­க­ளுக்­குள் கட்­டுக்­கட்­டாக ஒளித்து வைத்தி ருந்த ரூ.20 லட்­சம் பணம், சில்­ல­ரைக் காசு மூட்­டை­க­ளை­யும் போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

இவர் ஏற்­கெ­னவே வடி­வேலு பட நகைச்­சுவை காட்­சி­க­ளின் பாணி­யில் வாணி­யம்­பா­டி­யில் பல வரு­டங்­க­ளுக்கு முன்பு தனி­யாக சிக்­கிய காவல் அதி­காரி ஒரு­வரை ரத்­தம் சொட்ட சொட்ட கடித்­து­விட்டு அவரை வீட்­டிற்­குள் வைத்து பூட்­டிச்சென்­ற­வர் என்­றும் கூறப்­படு­கிறது.

வாணி­யம்­பாடி பகு­தி­யில் கஞ்சா விற்­பனை நடப்­ப­தாக வந்த தக வலை அடுத்து, அங்கு சோதனை நடத்­தச்­சென்ற தனிப்­படை போலி சாரை தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து தாக்­கிய மகேஸ்­வரி, அவரை மடக்­கிப் பிடிக்க முயன்ற சூர்யா என்ற போலி­சின் கையை­யும் முறித்து தூக்கி வீசி­யுள்­ளார்.

கஞ்சா விற்­பனை மூலம் ஒரு­வர் சம்­பா­தித்த சொத்­து­கள் அனைத்தையும் அரசு கைய­கப்­படுத்த முழு அதி­கா­ரம் உள்­ள­தால் மகேஸ்­வரியின் பெய­ரில் உள்ள 40 வீட்­டுப் பத்­தி­ரங்­களை போலி­சார் கைப்­பற்றி உள்­ள­தா­க­வும் மற்ற சொத்­து­கள் குறித்து விசா­ரணை நடந்து வருவதாக­வும் திருப்­பத்­தூர் மாவட்ட காவல் அதிகாரி விஜயகுமார் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!