சுடச் சுடச் செய்திகள்

கொரோனா கிருமித் தொற்று சமூகத் தொற்று ஆகவில்லை

சென்னை: கொரோனா கிரு­மித் தடுப்பு நட­வ­டிக்­கை­யில் இந்­தி­யா­வி­லேயே சிறப்­பான முறை­யில் தமி­ழக அரசு செயல்­பட்டு வரு­கிறது. நாட்­டி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் அதிக அள­வில் கொரோனா பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்றன. இந்தவகையில் நாள்­தோ­றும் சுமார் 13,000 பரி­சோ­த­னை­கள் நடை­ பெ­றுவதாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்று இன்­னும் சமூ­கத் தொற்­றாக மாற­வில்லை. குறிப்­பிட்ட பகு­தி­க­ளில்­தான் நோய்த்­தொற்று அதிகம் உள்­ளது என்று மேலும் கூறி­ய­வர், மத்­திய அரசு படிப்­படி­யாக நிதியை விடு­வித்து வரு­கிறது. எனி­னும் கேட்ட அள­வுக்கு நிதி கிடைக்­கா­த­தால் நிதிச் சுமையை சமா­ளித்து வரு­வதாகக் கூறினார்.

சேலம் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் அதி­கா­ரி­க­ளு­டன் ஆய்வு மேற்­கொண்ட பழ­னி­சாமி, கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் அடுத்­த­டுத்து எடுக்க வேண்­டிய தொடர் நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேட்­ட­றிந்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பழனிசாமி கூறுகையில், “அர­சின் வழி­மு­றையை மாவட்ட நிர்­வா­கம் முறை­யா­கப் பின்­பற்­றி­ய­தால் கொரோனா இல்­லாத மாவட்­ட­மாக சேலம் மாறி­யுள்­ளது.

“சேலம் மாவட்­டத்­தில் 14,003 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்டு, 35 பேருக்கு உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­கள் சிகிச் சைக்கு பிறகு வீடு திரும்பி விட்ட னர்,” என்று குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் 67 கொரோனா பரி­சோ­தனை நிலை­யங்­கள் மூலம் நாள்­தோ­றும் 13,000 பேருக்கு கொரோனா பரி­சோ­தனைகள் செய்­யப்பட்டு வருகின்றன.

கோடைக்­கா­லம் என்­ப­தால் குடி­நீர்ப் பிரச்­சினை­கள் ஏற்­ப­டா­மல் இருக்கவும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்கப்பட்டு வரு கின்றன என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில்

14,853 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கிருமிப் பரவல் சமூகத் தொற்று ஆகாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon