குஷ்பு: தலைமைக்கு ஒருபோதும் ‘ஆமாம் சாமி’ போடமாட்டேன்

சென்னை: அண்­மை­யில் வெளியான மத்­திய அர­சின் புதிய கல்­விக் கொள்­கைக்கு கூட்­டணி கட்சி­க­ளான காங்­கி­ர­சும் திமு­க­வும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, பாஜகவின் புதிய கல்­விக் கொள்­கையை வரவேற்­ப­தாக டுவிட்­ட­ரில் கருத்து பதி­விட்­டுள்­ளது அர­சி­யல் வட்டாரத்­தில் சலசலப்பைக் கூட்டியுள்­ளது.

இது­கு­றித்து விளக்­கம் அளித்துள்ள குஷ்பு “தலைமை என்ன சொல்­கி­றதோ அதற்­கெல்­லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு, தலை­யாட்­டும் தொண்டனாக ஒருபோதும் தான் இருக்க விரும்பவில்லை என்­றும் சுதந்­தி­ர­மாக எனது கருத்­து­க­ளைத் தெரிவிப்­பேன்,” என்­றும் கூறி­யுள்­ளார்.

புதிய கல்­விக் கொள்கை குறித்த அணுகுமுறையில், ராகுல் காந்தியின் கருத்­தில் இருந்­தும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் கருத்­து­களில் இருந்­தும் தான் வேறு­ப­டு­வ­தா­க­வும் இந்த புதிய கல்­விக் கொள்கை உண்மையிலேயே சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்நிலையில், குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர் திமுகவிலிருந்து காங்கிரசுக்கு தாவினீர்கள், இப் போது அங்கிருந்து பாஜக பக்கமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள குஷ்பு, உங்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், இதில் தவறில்லையே என கூறியுள்ளார்.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் புதிய கல்விக் கொள்­கைக்கு தமி­ழக காங்கிரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரியும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார்.

“காங்­கி­ர­சில் கருத்து கூற சுதந்­தி­ரம் உள்ளது. கட்­சி­யின் அமைப்­புக்­குள் பேசி­னால் அதற்கு வர­வேற்பு உண்டு. வெளி­யில் வரம்பு மீறி பேசி­னால் அதற்கு முதிர்ச்சி இன்ைம என்றே பெயர்,” என டுவிட்­ட­ர் பதி­வில் ேக.எஸ்.அழ­கிரி மேற்கோள் காட்டி­யுள்­ளார்.

ஏற்கெனவே குஷ்பு பாஜ­க­வில் சேர இருப்­ப­தாக வதந்­தி­கள் பர­வின. அதனை உறுதி செய்­வது போல், இப்போது புதிய கல்­வித் திட்­டத்­திற்கு அவர் ஆத­ரவு தெரி­வித்து டுவிட் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை வெடித்து வருகிறது.

காங்கிரசில் கருத்து சுதந்திரம் உள்ளது. கட்சிக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் வரம்பு மீறி புறம் கூறுவது முதிர்ச்சி இன்மையையே காட்டுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!