எல். முருகன்: ரஜினி விரும்பினால் அவருடன் பாஜக கூட்டணி வைக்கும்

ரஜி­னி­காந்த் கட்சி ஆரம்­பித்­த­வு­டன் அவ­ரி­டம் கூட்­டணி குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வோம். அவர் விரும்­பி­னால் அவ­ரு­டன் கூட்­டணி வைக்க பாஜக தயா­ரா­கவே உள்­ளது என்று அக்­கட்­சி­யின் தமி­ழ­கத் தலை­வர் எல். முரு­கன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பாஜக தனித்து நின்­றா­லும் 60 தொகு­தி­க­ளி­லும் வெற்­றி­பெ­றும் என்­றும் விரை­வில் செயிண்ட் கோட்­டை­யி­லும் பாஜ­க­வின் காவிக் கொடி பறக்­கும் என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

இதற்­கி­டையே, “மத்­திய அர­சின் வேளாண் மசோ­தாக்­களை எதிா்ப்­ப­வா்­கள் இடைத்­த­ர­கா்­கள். அவர்­கள் பெருமுத­லா­ளி­க­ளுக்கு துணை போகி­றாா்கள்,” என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ளாா்.

மத்­திய அர­சின் மூன்று மசோ­தாக்­க­ளுமே, விவ­சாய கட்­ட­மைப்­பு­க­ளைப் பெருக்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரு­கின்­றன. இதன்­மூ­லம் விளை­பொ­ருள்­க­ளுக்கு லாப­க­ர­மான விலை­ பெறமுடியும்.

ஆனால், பாஜக அரசு எந்­தத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தா­லும் அதை எதிா்க்கவேண்­டும் என்ற முடி­வில் திமுக தலைவா் மு.க.ஸ்டா­லின் இருக்­கிறாா். அதை­யே­தான் இந்த விவ­கா­ரத்­தி­லும் அவா் செய்­கிறாா். இது கண்­டிக்­கத்­தக்­கது.

மசோ­தாக்­களை எதிா்ப்­ப­தன் மூலம், தமி­ழ­கத்­தில் திமுக கொண்டு வந்­த­தா­கச் சொல்­லப்­பட்ட உழவா் சந்தை திட்­டத்தை அவரே எதிா்க்­கி­றாரோ என்று எண்­ணத் தோன்­று­கிறது.

தமி­ழக நல­னில் அக்­கறை காட்­டு­வ­தா­கச் சொல்­லிக்கொண்டு மாநி­லத்­துக்கு துரோ­கம் செய்­யும் நிலைப்­பாட்டை எதிா்க்­கட்­சி­கள் மாற்­றிக்கொள்­வது நல்­லது என்றும் எல்.முரு­கன் தெரி­வித்­துள்ளாா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!