ஏழு நாள்கள் சிகிச்சையளிக்க ரூ.4 லட்சம் கட்டணம்

தமி­ழ­கத்­தில் பல்­வேறு பகு­தி­களில் கொவிட்-19 நோய்க்கு சிகிச்­சை­ய­ளிக்க தனி­யார் மருத்துவ­ம­னை­களில் லட்சக்­க­ணக்­கில் கட்­ட­ணம் வசூலிக்­கப்­ப­டு­வ­தாக பர­வ­லா­கப் புகார் எழுந்­துள்­ளது.

ஏழு நாள்­கள் சிகிச்­சை­ய­ளிக்க சுமார் நான்கு லட்­சம் ரூபாய் வரை வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக பொது­மக்­களை மேற்­கோள் காட்டி தமி­ழக ஊட­கம் பரபரப்புச் செய்தி ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

நாமக்­கல் மாவட்­டத்­தில் உள்ள பல்­வேறு அரசு மருத்­து­வ­ ம­னை­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு செல­வில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. மேலும் நோயா­ளி­க­ளுக்கு சிற்­றுண்டி, கப­சு­ரக் குடி­நீர், வைட்­ட­மின் மாத்­தி­ரை­கள், சுண்­டல், பாசிப்­ப­ருப்பு என தின­மும் சத்­தான உணவு வகை­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால், இதற்கு நேர்­மா­றாக தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் ஏழு நாள்­கள் சிகிச்சை அளிப்­ப­தற்கே 3.5 லட்­சம் முதல் நான்கு லட்­சம் ரூபாய் வரை கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும் நோயா­ளி­க­ளின் குடும்­பத்­தார் செலுத்­தும் முழுத் தொகைக்­கும் ரசீது தரப்­ப­டு­வ­தில்லை.

அதிகபட்­ச­மாக சுமார் 60 ஆயி­ரம் ரூபாய்க்கு மட்­டுமே ரசீது வழங்­கும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் தினந்­தோ­றும் குறைந்­த­பட்­ச­மாக 50 முதல் 60 ஆயி­ரம் ரூபாய் வரை கட்­ட­ணம் என்று நிர்­ண­யித்து, அதை­யும் சிகிச்­சைக்கு அனு­ம­திக்­கும் போதே மொத்­த­மா­கப் பெற்று­விட வசூல் வேட்டை நடத்­து­வ­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில் தனி­யார் மருத்துவ­ம­னை­கள் கொரோனா நோயா­ளி­க­ளுக்குச் சிகிச்சை அளிப்­ப­தற்­கான விதி­மு­றை­களை அரசு வகுத்­துள்­ள­தாக நாமக்­கல் மாவட்ட ஆட்­சி­யர் தெரி­வித்­துள்­ளார். அரசு உத்­த­ரவை மீறிக் கூடு­தல் கட்­ட­ணம் வசூ­லித்த சில தனியார் மருத்­து­வ­ம­னை­கள் மீது தமிழக அரசு அண்மையில் கடும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அவர் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!