திருட வந்த வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்ட திருடர்கள்

ராணிப்­பேட்டை: ஆற்­காட்­டில் திருட வந்த வீட்­டில் நகை, பணம் இல்­லா­த­தால் ஏமாற்­ற­ம­டைந்த திரு­டர்­கள் அந்த வீட்­டில் இருந்த சாப்­பாட்­டைச் சாப்­பிட்­டு­விட்டு, இந்தச் சாப்­பா­டும் போதா­மல் தோசை­யை­யும் சுட்­டுச் சாப்­பிட்­டு­விட்­டுச் சென்­றிருப்பது தெரிய வந்­துள்­ளது.

சம்­ப­வம் குறித்து ஆற்­காடு டவுன் காவல்­நி­லை­யப் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

ராணிப்­பேட்டை மாவட்­டம், ஆற்­காடு அபி­ராமி நக­ரில் வசித்து வரும் வினோத்­கு­மார் என்­ப­வர், ஒரு பார்­சல் சேவை நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்து வரு­கி­றார். நேற்று காலை இவர் தனது மனைவி ரேவதி, கைக்­கு­ழந்தை யுடன் வீட்­டைப் பூட்­டி­விட்டு வெளி­யில் சென்­று­விட்டு மாலை­யில்­தான் வீடு திரும்­பி­னார். அப்­போது, வீட்­டின் பூட்டு உடைக்­கப்­பட்டு இருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார்.

உள்ளே சென்று பார்த்­த­போது பீரோ உடைக்­கப்­பட்டு, அதில் இருந்த பொருட்­கள் எல்­லாம் சித­றிக்­கி­டந்­தன. திருட வந்த இடத்­தில் நகை, பணம் இல்­லா­த­தால் ஏமாற்­ற­ம­டைந்த திரு­டர்­கள் சமை­ய­ல­றைக்­குச் சென்று அங்கு சமைத்து வைத்­தி­ருந்த சாப்­பாட்­டைச் சாப்­பிட்­டுள்­ள­னர். சாப்­பாடு குறை­வாக இருந்­த­தால், அங்­கி­ருந்த மாவை எடுத்து அதில் தோசை வார்த்து சாப்­பிட்­டு­விட்­டுச் சென்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!