சினை மாட்டை காப்பாற்ற முடியாததால் அமைச்சர் சோகம்

சினை மாட்டை காப்பாற்ற முடியாததால் அமைச்சர் சோகம்

1 mins read
4cf16446-9a88-4981-a5ce-1ff4ec77155e
சினை மாட்டுக்கு காலில் அடிபட்டுள்ள இடத்தில் முதலுதவிகளை செய்த அமைச்சர் விஜயபாஸ்கர். படம்: இந்திய ஊடகம் -

மது­ரை­யி­லி­ருந்து விரா­லி­ம­லைக்கு காரில் சென்று கொண்­டி­ருந்த சுகா­தா­ரத் துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், சாலை­யில் அடி­பட்­டுக் கிடந்த பசு­வைக் காப்­பாற்ற முடி­யா­த­தால் சோகமடைந்­தார்.

விரா­லி­மலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்­சா­லை­யில் வாக­னம் மோதி­ய­தால் பசு ஒன்று உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்தது.

அந்த பசு கர்ப்­ப­மா­க­வும் இருந்­தது. காரி­லி­ருந்து இறங்­கிய அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், மாட்­டின் காலில் அடிப்­பட்ட இடத்­தில் முத­லு­த­வி­களை செய்­தார்.

ஆனால் சிகிச்சை அளித்துக் ­கொண்­டி­ருந்­த­போதே மாட்­டின் உயிர் பிரிந்­தது. இத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த அமைச்­சர் சோகத்­தில் மூழ்­கி­னார்.

பசு உயி­ரி­ழந்­த­தால் அழு­து­கொண்­டி­ருந்த அதன் உரி­மை­யா­ள­ருக்கு அமைச்­சர் ஆறு­தல் கூறி­ய­தோடு அரசு சார்­பில் இழப்­பீட்­டுத் தொகை கிடைக்க ஏற்­பாடு செய்­வ­தா­க­வும் உறு­தி­ய­ளித்­தார்.

பசு மாட்­டின் மீது வாகனத்தை மோதியவர்கள் நிறுத்­தா­மல் சென்று விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் இதற்கு முன்பு திருச்சி விமான நிலை­யத்­துக்கு அருகே சாலை­யில் ரத்­தம் கொட்­டிய நிலை­யில் விழுந்­து­கி­டந்த மேரி எனும் பெண்­ணுக்கு முத­லு­த­வி­களை செய்து மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ளார்.

மற்­றொரு சம்­ப­வத்­தில் சென்­னை­யில் விபத்­தில் அடி­பட்டு கிடந்த ஒரு­வரை தனது காரி­லேயே மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்து பின்­னர் ஆட்­டோ­வில் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று விசா­ரித்­துள்­ளார்.

குறிப்புச் சொற்கள்