3வது அணி? காங்கிரஸ்-கமல் ரகசிய பேச்சு

தமிழ்­நாட்­டில் வரும் சட்­ட­மன்­றத் தேர்­தல் இது­வரை இல்­லாத அள­வுக்கு பெரும் மாற்­றங்­களு­டன் நடக்­குமெனத் தெரி­கிறது.

மாநில கட்­சி­களும் தேசிய கட்சி­களும் பல்­வேறு வித­மான வியூ­கங்­களை வகுத்து வரு­கின்­றன. நடி­கர் கமல்­ஹா­ச­னின் மக்­கள் நீதி மய்­யம் என்ற அர­சி­யல் கட்சி தேர்­தலில் களம் இறங்க இருக்­கிறது.

திரைப்­பட நடி­கர் ரஜி­னி­காந்த் நேற்­று­கூட தன்­னு­டைய அர­சி­யல் முடிவு பற்றி திட்­ட­வட்­ட­மாக எதை­யும் அறி­விக்­க­வில்லை என்­றா­லும் தேர்­தல் நெருங்க நெருங்க அவர், உறு­தி­யான முடிவு எதை­யா­வது எடுக்­கக்­கூ­டும் என்று தெரி­கிறது.

மாநி­லத்­தின் மிக முக்­கிய அர­சி­யல் கட்­சி­யா­கத் திக­ழும் திமுகவை எப்­ப­டி­யா­வது வீழ்த்­தி­விட்­டால் தனக்கு நேர­டி­யாக இல்­லா­விட்­டா­லும் மறை­மு­க­மான செல்­வாக்கு அந்த மாநி­லத்­தில் கூடி­விடும் என்று மத்­திய ஆளும் கட்சி பாஜக திட்­ட­மி­டு­கிறது.

அதே­வே­ளை­யில், இது நாள் வரை திமு­க­வு­டன் சேர்ந்து தேர்­தலைச் சந்­தித்து வந்­துள்ள காங்­கி­ரஸ் கட்சி தன்­னு­டைய வியூ­கத்தை மாற்­றிக்­கொள்ள வேண்­டிய நிலை வர­லாம் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள்.

தொகுதி பேரம் பேசு­வது, ராஜீவ் காந்தி கொலை­யா­ளி­க­ளின் விடு­தலைக்கு எதிர்ப்பு போன்ற பிரச்­சி­னை­கள் கார­ண­மாக திமுக கூட்­டணி­யில் இருந்து வெளி­யேற வேண்டிய சூழ்­நிலை காங்­கி­ர­சுக்கு ஏற்­ப­ட­லாம் என்று அவர்­கள் கணிக்­கி­றார்­கள்.

தமி­ழ­கத்­தில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு அதிக இடத்தை ஒதுக்கி கொடுத்து அந்­தக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் அதி­முக போன்ற எதிர்க்­கட்­சி­யி­டம் தேல்வி அடைந்­தால் அது தன்­னு­டைய ஆட்சி அமை­வதற்குப் பெரிய தடை­யா­கி­வி­டும் என்று திமுக கரு­து­கிறது.

இதை எல்­லாம் உணர்ந்­து­கொண்டு இருக்­கும் காங்­கி­ரஸ் கட்சி ரக­சி­ய­மாக காய்­களை நகர்த்­தத் தொடங்கி இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

கமல்­ஹா­ச­னின் மநீம கட்சி, டிடிவி தின­க­ர­னின் அம­முக ஆகிய கட்­சி­க­ளு­டன் இணைந்து மூன்­றாவது அணியை அமைப்­பது பற்றி காங்­கி­ரஸ் ரக­சிய பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்டு இருப்­ப­தாக தமி­ழக காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் உறுதியாகக் கூறு­கி­றார்­கள்.

முதல் கட்­ட­மாக, கம­லி­டம் நடத்­திய பேச்­சுக்கு சாத­க­மான பதில் கிடைத்­துள்­ள­தால் காங்­கி­ர­சார் ஊக்கமடைந்துள்ளனர். சசிகலா விடு­த­லைக்குப் பின் அதிமுகவில் வெளி­யேற்­றம் நடக்­க­லாம் என காங்­கி­ரஸ் எதிர்­பார்க்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!