முதல் நாளிலேயே அதிரடி; 3,500 குக்கர்கள் சிக்கின

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­தல் எப்­ரல் 6ஆம் தேதி என அறி­விக்­கப்­பட்­ட­துமே தேர்­தல் நடத்தை விதி­கள் நடப்­புக்கு வந்­து­விட்­டன. தமி­ழ­கம் முழு­வ­தும் வாக­னச் சோத­னை­யில் பறக்­கும் படை­யி­னர் உட­டி­ன­யாக அமர்த்­தப்­பட்­ட­னர். முதல் நாளி­லேயே தேர்­தல் நடத்தை விதி­மீ­றலை அவர்­கள் முறி­டித்துள்­ள­னர்.

அரி­ய­லூர் மாவட்­டம் வார­ண­வாசி அரு­கே­யுள்ள சமத்­து­வ­பு­ரத்­தில் நேற்று காலை தேர்­தல் பறக்­கும் படை­யி­னர் சோதனையில் ஈடு­பட்­ட­னர். அப்­போது சென்னை கும்­மி­டிப்­பூண்­டி­யி­லி­ருந்து தஞ்சை நோக்கி இரண்டு லாரி­கள் வந்­தன. ஒரு லாரியை அதி­கா­ரி­கள் நிறுத்­தியபோது, அட்­டைப்­பெட்டி மட்­டும் இருப்­ப­தாக லாரி­யில் இருந்­த­வர்­கள் கூறி­னர். தொடர்ந்து அங்­கிருந்து அந்த லாரி வேக­மா­கக் கிளம்­பிச் சென்­று­விட்­டது.

சற்று நேரம் கழித்து வந்த மற்­றொரு லாரியை பறக்­கும் படை போலி­சார் வழி­ம­றித்து சோதனை மேற்­கொண்­ட­னர். அதில் குக்­கர் கள் இருப்­ப­தும் தஞ்சை மாவட்ட அம­மு­க­வி­னர் ஜெய­ல­லிதா பிறந்த நாள் விழா என குறிப்பிடப்பட்டு ஜெய­ல­லிதா, டிடிவி தின­க­ரன் பட ‘ஸ்டிக்­கர்’ குக்கர்களில் ஒட்­டப்­பட்­டி­ருப்பதும் தெரிய வந்தது.

இதைக் கண்டதும் தேர்­தல் பறக்­கும் படை­யி­னர் திரு­மா­னூர் கொள்­ளி­டம் பாலம் சோதனை சாவ­ டிக்­குத் தொடர்புகொண்டு முத­லில் சென்ற லாரியை பறி­மு­தல் செய்ய உத்­த­ர­விட்­ட­னர். தொடர்ந்து இரு லாரி­க­ளை­யும் பிடித்து அரி­ய­லூர் கோட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­திற்­குக் கொண்டு சென்று முழுமையாக சோதனையிட்டனர். இரண்டு லாரி

­க­ளி­லும் ரூ.12 லட்­சம் மதிப்­பி­லான 3 லிட்­டர் குக்­கர்­கள் இருந்­தது தெரிய வந்­தது. 220 அட்­டைப் பெட்­டி­களில் இருந்த 3,520 குக்­கர்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

சம்­ப­வம் குறித்து கருத்­துத் தெரி­வித்த மாநில அம­முக வழக் கறி­ஞர் பிரிவு செய­லா­ளர் வேலு கார்த்­தி­கே­யன், “எங்­க­ளி­டம் சரி யான ஆவ­ணங்­கள் உள்­ளன.

“தேர்தலுக்­கா­கப் பரி­சுப்­பொ­ருட்­கள் கொடுக்­க­வேண்­டிய அவ­சி­யம் எங்­க­ளுக்கு இல்லை,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!