55 வயது மாது எட்டி உதைக்கப்பட்ட விவகாரம்; விசாரணை

நடை­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டிருந்த 55 வயது மாது முகக்­க­வ­சம் அணி­யா­த­தால் அவ­ரது மார்­பில் எட்டி உதைத்­த­தா­கக் கூறப்­படும் சம்­ப­வத்­தில் ஓர் ஆட­வ­ரி­டம் போலி­சார் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இனத்ை­தக் குறிப்­பிட்டு அந்த நபர் தூற்­றி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தனி­யார் துணைப்­பாட ஆசி­ரி­ய­ரான நிட்டா விஷ்­ணு­பாய் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று சுவா சூ காங் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து விளை­யாட்­ட­ரங்­கத்தை நோக்கி வேக­மாக நடந்து சென்­று­கொண்­டி­ருந்­தார்.

மூச்­சு­விட சிர­ம­மாக இருந்­த­தால் இந்­திய சிங்­கப்­பூ­ர­ரான அவர், முகக்­க­வ­சத்தை மூக்­குக்­குக் கீழ் இறக்­கி­யி­ருந்­தார். அப்­போது ஒரு பெண்­ணு­டன் வந்த நபர் அவரை நோக்கி சத்­தம் போட்­டார்.

"முகக்­க­வ­சத்தை மூக்­குக்கு மேல்­போ­டு­மாறு அந்த நபர் கத்­தி­னார். உடற்­ப­யிற்சி செய்­வ­தால் முகக்­க­வ­சத்தை இறக்­கி­யி­ருக்­கி­றேன் என்று அவ­ரி­டம் பொறு­மை­யா­கக் கூறினேன்," என்றார் நிட்டா.

ஆனால் அதை தெரிந்­தும் இரு­பது வய­து­களில் இருந்த அந்த ஆட­வர் மீண்­டும் சத்­தம் போட்­டார்.

"தகாத வார்த்­தை­க­ளைப் பேசி­னார். இன ரீதி­யில் அவர் தூற்­றி­ய­ தால் எனக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. அதன் பிறகு அவ­ரி­டம் வாக்கு­வா­தத்­தில் ஈடு­ப­டா­மல், 'கட­வுள் உன்னை ஆசிர்­வ­திக்­கட்­டும்' என்று கூறி நகர்ந்­து­விட்­டேன். சில மீட்­டர் தொலை­வில் இருந்த அந்த நபர் ஆத்­தி­ரத்­து­டன் ஓடி வந்து என் மீது பறந்து எட்டி உதைத்­தார். அதில் கீழே விழுந்­து­விட்­டேன்." என்­று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நிட்டா கூறினார்.

கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அந்த நப­ரு­டன் இருந்த பெண்­ணும் அவரை தடுத்து நிறுத்­த­வில்லை என்­றார் நிட்டா.

அன்று நடந்த சம்­ப­வத்தை கண­வ­ரி­ட­மும் 26, 27 வய­தில் உள்ள இரண்டு பிள்­ளை­க­ளி­ட­மும் தெரி­வித்த அவர் பின்­னர் போலி­சில் புகார் செய்­தார்.

இதனை உறுதி செய்த போலி­சா­ரும் சம்­ப­வத்தை விசா­ரித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

தற்­போ­தைய விதி­மு­றைப்­படி கடு­மை­யான உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ ப­டு­ப­வர்­கள் முகக்­க­வ­சத்தை அகற்றலாம்.

ஆனால் உடற்­ப­யிற்சி முடிந்­த­தும் முகக்­க­வ­சத்தை மீண்­டும் அணிய வேண்­டும்.

கடந்த மே மாத­மும் பாசிர் ரிஸில் இதே­போன்ற சம்­ப­வம் ஒன்று நடந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் இருந்து வந்­த­வர்­களை நோக்கி கிரு­மி­யைப் பரப்­பு­ வ­தா­கக் கூறி ஒரு­வர் கத்திக் கூச்­சல் போட்­டார்.

சிங்­கப்­பூ­ரர் என்று நம்­பப்­படும் அவர், "திரும்­பிப் போ, இங்கே வந்து கிரு­மி­யைப் பரப்­பாதே," என்று இந்­திய குடும்­பத்­தி­டம் தகாத வார்த்­தை­க­ளைச் சொல்லி சத்­தம் போடு­வதை இணை­யத்­தில் பர­விய காணொளி காட்­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!