மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

1 mins read
b8315099-3aed-45fb-b3fe-6325ba95482f
-

ஸ்ரீவில்லிபுத்தூர்: கொவிட்-19 பரவல் காரணமாகத் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன; பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப் பட்டன.

இப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடப்பில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியாக, புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தம் கையில் இருந்து 1,000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டிலும் புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு அவர் திறன்பேசி வாங்கித் தந்தார். அவரது இச்செயலை அப்பகுதிவாசிகள் எல்லாரும் பாராட்டி வருகின்றனர்.