தக்காளி, வெங்காயம் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை இப்ேபாது ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளியின் விலையேற்றத்துக்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் மழையே காரணம் என்றும் செடியிலேயே தக்காளிகள் அழுகும் நிலை உள்ளதால் வரத்து குறைந்துவிட்டதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் விரைவில் கொண்டாடப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் தக்காளி, வெங்காயத்தின் தேவை கணிசமாக அதிகரிக்கும். அதை மனதில் வைத்து வெங்காயம், தக்காளியைப் பதுக்கி வருவதாகவும் வெங்காயத்தின் விலை ரூ.47க்கு விற்கப்படுவதாகவும் ‘புதிய தலைமுறை’ செய்தி தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!