பருவ மழை தீவிரம்: சென்னையில் 77% அதிகம்

சென்னை: தமிழ்­நாட்­டில் சென்ற மாதப் பிற்­ப­கு­தி­யில் தொடங்­கிய வட­கி­ழக்­குப் பரு­வ­மழை இது­வரை வழக்­கத்­தை­விட 54 விழுக்­காடு அதி­க­மாக பெய்து இருக்­கிறது.

வட­கி­ழக்குப் பரு­வ­மழை காலத்­தில் தமி­ழ­கத்தில் சரா­ச­ரி­யாக 26 செ.மீ. மழை பெய்­யும். ஆனால் இது­வ­ரை­ இந்த ஆண்டு 40 செ.மீ. மழை பதி­வாகி இருக்­கிறது.

சென்­னை­யில் 77 விழுக்­காடு அதி­க­மாக மழை பெய்து இருக்­கிறது. மாநி­லம் முழு­வ­தும் ஏறக்­கு­றைய எல்லா நீர்­நி­லை­களும் கொள்­ள­ளவை எட்­டி­விட்­ட­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆறு­கள் வழிந்து ஓடு­கின்­றன. பல நீர்­நி­லை­களும் திறக்­கப்­பட்டு வரு­கின்­றன. மாநி­லத்­தின் பல பகுதி­களும் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் மக்­களின் அன்­றாட வாழ்க்கை சிர­மத்­திற்கு உள்­ளாகி இருப்­ப­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன.

போக்­கு­வ­ரத்­தும் கடும் பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்­கிறது. இந்­நி­லை­யில், மழை தொட­ரும் என்று வானிலை ஆய்வு நிலை­யம் அறி­வித்து இருப்­ப­தால் அதி­கா­ரி­கள் முழு­மூச்­சாக ஆயத்­தப் பணி­களில் இறங்கி இருக்­கி­றார்­கள்.

அதே­வே­ளை­யில், அவர்­கள் நிவா­ர­ணப் பணி­க­ளி­லும் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

ஏற்­கெ­னவே கொரோ­னாவை ஒழிக்க பாடு­படும் நிர்­வா­கம், மழை கார­ண­மாக தொற்­று­நோய்­கள் ஏற்­ப­டு­வதை தடுக்­க­வும் முயற்சி­களை முடுக்­கி­விட்டு உள்­ள­தாக அரசு தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!