சென்னை: மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றம்

சென்னை: மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றம்

1 mins read
5928d2d9-4819-4531-a389-41df7b8e0e17
சென்னையில் கழிவுநீர் ஓடும் சாக்கடையில் ஏராளமான கழிவுப் பொருள்கள் கலந்ததால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை நீக்க முற்பட்டபோது அதற்குள் தவறி விழுந்த ஒருவர் வெளியே வர பொதுமக்கள் உதவினர்.படம்: இபிஏ -

சென்னை: கடந்த சில தினங்­க­ளாகப் பெய்­து­வந்த கன­மழை ஓய்ந்­துள்­ளதை அடுத்து சென்­னை­யில் பல்­வேறு பகு­தி­களில் தேங்கி நின்ற மழை நீர் முழு­வ­து­மாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளது.

778 இடங்­களில் இந்த நடவடிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சென்னை மாந­க­ராட்சி தெரி­வித்­தது.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகுதி­களில் பலத்த மழை பெய்து வந்­தது. இத­னால் பல்­வேறு பகுதி­களை மழைநீர் சூழ்ந்­தது. தாழ்­வான பகு­தி­களில் உள்ள வீடு­களில் மழை நீர் புகுந்­தது. கன­ம­ழை­யால் சென்னை­வா­சி­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டு, மக்­கள் வீடு­களில் முடங்­கி­னர்.

மேலும், சென்­னை­யில் மட்­டும் கடந்த அக்­டோ­பர் 25ஆம் தேதி முதல் நவம்­பர் 14ஆம் தேதி வரை 579 மரங்­கள் வேரோடு சாய்ந்தன. மழை நீர் தேங்­கி­ய­தா­லும் மரங்கள் சாய்ந்­த­தா­லும் பல பகு­தி­களில் போக்கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து சென்னை மாந­க­ராட்சி ஊழி­யர்­கள் இயல்பு நிலையை ஏற்­ப­டுத்த கள­மி­றங்கி­னர்.

முதற்­கட்­ட­மாக சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட 778 பகுதி­களில் 750 இடங்­களில் தேங்கிய மழைநீர் முழு­வ­து­மாக வெளி­யேற்­றப்­பட்­டது. குறிப்­பாக நக­ரில் உள்ள 22 சுரங்­கப்­பா­தை­களில் இருந்த மழை நீர் வெளி­யேற்­றப்­பட்­ட­தால் போக்­கு­வ­ரத்து இயல்புநிலைக்கு திரும்­பி­யது. மேலும், மழை­யால் கீழே விழுந்த மரங்­களும் கையோடு அகற்­றப்­பட்­டன. ஒரு­சில இடங்­களில் மட்­டும் தேங்­கி­யுள்ள மழை நீரை அகற்­றும் பணி நீடித்து வரு­கிறது. மிக விரை­வில் அந்­தப் பணி முடி­வ­டை­யும் என மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.