தள்ளுவண்டியில் ஐந்து வயது சிறுவனின் சடலம்

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரத்­தில் சாலை யோரம் நிறுத்தி வைக்­கப்­பட்டிருந்த தள்ளுவண்­டி­யில் ஐந்து வயது மதிக்­கத்­தக்க சிறு­வ­னின் சட­லம் இருப்­ப­தைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இது குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­வ­தாக புதிய தலை­முறை வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

விழுப்­பு­ரத்­தில் சென்னை செல்­லும் தேசிய நெடுஞ்­சா­லை­யில் மேல்­தெரு என்ற இடத்­தில் கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சலவைத் தொழில் செய்­து­வ­ரும் சிவ­குரு என்­ப­வர் தனது தள்­ளு­வண்­டியை வழக்­கம்­போல சாலை­யோ­ரம் நிறுத்தி வைத்து இருந்­தார். நேற்று காலை திரும்பி வந்த அவர், தள்­ளு­வண்­டி­யில் ஐந்து வயது மதிக்­கத்­தக்க ஆண் குழந்தை தூங்­கிக் கொண்­டி­ருந்­தது என நினைத்து அக்­கம்­பக்­கத்­தி­ன­ரி­டம் தெரி­வித்­தார். அப்­போது அந்­தச் சிறு­வனைத் தட்டி எழுப்ப சிலர் முயற்சி செய்­த­னர். ஆனால், சிறு­வன் அசை­வின்றிக் கிடந்­த­தால் அதிர்ச்­சி­ய­டைந்து, விழுப்­பு­ரம் மேற்கு காவல் நிலை­யத்­துக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

அங்கு வந்த காவல்­து­றை­யி­னர், ஆண் குழந்தை இறந்து கிடந்­த­தைக் கண்­ட­னர். குழந்­தை­யின் உட­லில் எந்த காய­மும் இல்லை.

இதையடுத்து காவல்­து­றை ­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து, உடலைக் கைப்­பற்றி பிரேதப் பரி­சோ­த­னைக்கு விழுப்­பு­ரம் முண்­டி­யம்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ மனைக்கு அனுப்பி வைத்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்தை தீவி­ர­மாக விசா­ரித்து வரும் காவல்துறை­யி­னர் அந்தப் பகு­தி­யில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!