10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு: வரும் 8ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு

மதுரை: பொறி­யி­யல் பட்­ட­தாரி இளை­ய­ரான கோகுல்­ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ெகாடூ­ர­மான முறை­யில் ஆண­வப் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

தமி­ழக மக்­க­ளைப் பத­ற­வைத்த இந்த வழக்கு தொடர்­பில், யுவ­ராஜ் உள்­ளிட்ட அவ­ரது நண்பர்கள் 10 பேரை குற்­ற­வா­ளி­கள் என்று மதுரை வன்­கொ­டு­மைத் தடுப்பு சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி சம்­பத்­கு­மார் நேற்று தீர்ப்­ப­ளித்­தார்.

மொத்த குற்­ற­வா­ளி­கள் 17 பேரில் விசா­ர­ணை­யின்­போதே இரு­வர் இறந்­து­விட்ட நிலை­யில், குற்­றம்­சாட்­டப்­பட்ட சங்­கர், அருள்­செந்­தில், செல்­வ­கு­மார், தங்­க­துரை, சுரேஷ் ஆகிய ஐவர் வழக்­கில் இருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் நீதி­பதி தீர்ப்­பில் கூறி­னார்.

குற்­ற­வா­ளி­கள் 10 பேருக்­கான தண்­டனை விப­ரம் வரும் 8ஆம் தேதி அறி­விக்­கப்­படும் என­ நீதி­பதி சம்­பத்­கு­மார் தெரி­வித்­தார்.

சேலம் மாவட்­டம், ஓம­லூ­ரைச் சோ்ந்த­வர் கல்­லூரி மாணவா் கோகுல்­ராஜ். பட்­டி­யல் இன சமூ­கத்­தைச் சேர்ந்த கோகுல்­ரா­ஜும் நாமக்­கல்­லைச் சேர்ந்த வேறு சமூ­கத்­தைச் சேர்ந்த இளம்­பெண்­ணும் நட்­பா­கப் பழ­கி­யுள்­ள­னர்.

பெண்­ணு­டன் திருச்­செங்­கோட் டில் உள்ள ஒரு கோயி­லுக்­குச் சென்­றி­ருந்த கோகுல்­ராஜ் கொல்­லப்­பட்­டார்.

இவா், கடந்த 2015ஆம் ஆண்டு, நாமக்­கல் மாவட்­டம், தொட்டி பாளை­யம் ரயில் தண்­ட­வா­ளத்­தில் தலை துண்­டிக்­கப்­பட்டு, சட­ல­மாக மீட்­கப்­பட்­டார்.

விசா­ர­ணை­யில், காதல் விவ காரத்­தில் அவர் ஆண­வக்­கொலை செய்­யப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

சங்­க­கி­ரி­யைச் சோ்ந்த தீரன் சின்­ன­ம­லைக் கவுண்­டர் பேர­வை­யின் நிறு­வ­னர் யுவ­ரா­ஜுக்­கும் அவ­ரது கூட்­டா­ளி­கள் உள்­பட 17 பேருக்­கும் இக்­கொ­லை­யில் தொடர்பு இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, கைது செய்­யப்­பட்­ட­னர்.

முத­லில் இந்த வழக்­கினை நாமக்­கல் மாவட்ட முதன்மை நீதி­மன்­றம் விசா­ரித்து வந்த நிலை­யில், கோகுல்­ரா­ஜின் தாய் சித்ரா தாக்­கல் செய்த மனு­வின் அடிப்­ப­டை­யில், மதுரை மாவட்ட சிறப்பு நீதி­மன்­றத்­துக்கு வழக்கை மாற்றி உயா்நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

அதன்­படி, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக மதுரை சிறப்பு நீதி­மன்­றத்­தில் வழக்கு விசா­ரிக்­கப்­பட்டு வந்­தது.

இவ்வழக்குத் தொடர்­பில் 106 சாட்­சி­க­ளி­டம் விசா­ரிக்­கப்­பட்டு, 500 பக்க அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்டு உள்­ளது.

முன்­ன­தாக, கோகுல்­ராஜ் வழக்கை விசா­ரித்த டிஎஸ்பி விஷ்­ணு­பி­ரியா தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

"இப்­போது வந்­துள்ள தீர்ப்பு நல்ல தீர்ப்பு. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தூக்­குத் தண்­டனை கொடுக்க வேண்­டும். என் கண­வர் இல்­லா­மல், நான் சிர­மப்­பட்டு பிள்­ளையை வளர்த்து, என் பிள்­ளை­யும் இறந்து நான் அனு­ப­வித்த கொடுமை அதி­கம். எந்த பெற்ற தாய்க்­கும் இந்­தக் கொடுமை வரக்­கூ­டாது. இந்த தீர்ப்­புக்­கா­கத்­தான் நான் உயி­ரோடு இருந்­தேன்," என்று புதிய தலை­முறை ஊட­கத்­துக்கு அளித்­துள்ள பேட்­டி­யில் கோகுல்­ரா­ஜின் தாய் சித்ரா கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!