இளமைக்கு இளநீர், குளுமைக்கு பதநீர்

சனிக்கிழமை ஒரு சாமானியர்

கலப்படமே காலம் என்றாகிவிட்ட சூழலில் இளநீரையும் பதநீரையும் குறைந்த விலைக்கு விற்று மனிதர்களின் உடல்நலனைக் காக்கும் நாங்கள் சாலை ஓர மருத்துவர்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள்...

தென்னை வைத்­த­வர் தின்­று­விட்டு போவார்; பனை வைத்­த­வர் பார்த்து­விட்டு போவார் என்று தமிழ்­நாட்­டில் வழக்குமொழி உண்டு. அதா­வது தென்­னங்­கன்று நட்டவர் வாழும் காலத்­திலேயே அது காய்த்து பலன் தந்­து­வி­டும்.

ஆனால் பனங்­கன்று நட்­டால் அது வளர்ந்து காய்த்து பலன் தருவ தற்­குள் ஒரு­வ­ரின் ஆயுள் முடிந்து விடும். அந்த அள­வுக்கு தென்னை, பனை இரண்­டும் நிதா­ன­மாக வளர்ந்து பலன் தரு­பவை.

கிளை­கள் இல்­லா­மல் வள­ரும் தாவர இனத்­தைச் சேர்ந்த தென்னை, பனை இரண்­டும் மனித இனத்­திற்கு அள­விட முடி­யாத அளவுக்கு நன்மை பயப்­பவை என்று சொல்­கி­றார்­கள் சந்­தி­ர­காசு, 60, சண்­மு­க­வேலு, 41 என்ற சாலை முக்­கூட்டு வியா­பாரி­கள்.

இந்த இரு­வ­ருமே சாலை ஓர­மாகக் காலம்தள்­ளும் சாமா­னி­யர்­கள். இவர்­களில் திருக்­க­ட­வூர் அருகே உள்ள மணிக்­கி­ரா­மம் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த, கடந்த 35 ஆண்டு­க­ளாக இள­நீர் வியா­பாரத் தில் ஈடு­பட்­டு­வருகின்ற திரு சந்­திரகாசு என்பவர் ஒருவர்.

அதற்கு முன், கள் இறக்கும் தொழி­லில் நான் ஈடு­பட்டு வந்­தேன். ஒரு நாளில் பனை, தென்னை என 20 மரங்­கள் ஏறி இறங்­கு­வேன்.

கள் இறக்க தமிழக அர­சு தடை விதித்­ததை அடுத்து சட்­ட­வி­ரோத மாக மாமூல் கட்டி கள் இறக்கி பணம் சம்­பா­தித்­தேன்.

அதற்­கும் ஆபத்­து­வர இள­நீர்­தொ­ழி­லில் ஈடு­பட்­டேன். நானே மரம் ஏறி இள­நீர் பறித்தேன். பிர­ப­ல­மான இந்து ஆல­யம் அமைந்­துள்ள திரு­வெண்­காடு என்ற ஊரில் கோயி­லுக்­குள் இள­நீர் வியா­பா­ரம் செய்­தேன். ஆனால் இடத்­துக்கு அதிக வாடகை கேட்டதால் அதைக் காலி செய்­து­விட்டு இந்த முக்­கூட்­டுக்கு வந்­து­விட்­டேன்.

தரங்­கம்­பாடி­யில் இருந்து திருக்­க­ட­வூர் செல்­லும் சாலை­யில் இருக்­கும் இந்த முக்­கூட்­டில் இந்த மரத்திற்குக்கீழ்தான் பல ஆண்­டு­களாக என் தொழில் நடக்­கிறது.

காலை­யில் எழுந்­த­தும் இள­நீர் வாங்க புறப்­ப­டுவேன். நாள் ஒன்றுக்கு 100 இள­நீர் வாங்கு­வேன்.

ஒன்று ரூ.8 வீதம் 800 ரூபாய் வேண்­டும். எனக்கு வய­தா­கி­விட்­ட­தால் இப்­போது நான் மரம் ஏறு­வ­தில்லை. மரங்­களில் ஏறி 100 இளநீர் பறித்துப்போட்­டால் ரூ.500 கூலி கொடுக்க வேண்­டும். மொத்­தம் ரூ.1,300 செல­வாகும். இரு சக்­க­ர­வா­க­னத்­திற்கு ரூ.150 பெட்­ரோல் போட வேண்­டும்.

காலை சுமார் 11 மணிக்கு இங்கு வரு­வேன். சரா­ச­ரி­யாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 இள­நீர் விற்­கும். மாலை­யில்தான் வீடு திரும்­பு­வேன். வீட்­டிற்­குப் போய்­தான் சாப்­பாடு. வழி­யில் இரு முறை தேநீர் அவ்வளவுதான்.

இது­தான் என் வாழ்க்கை என்று சொல்லி நிறுத்­தி­னார் சந்­தி­ர­காசு.

வேறு வரு­வாய் இல்லை என்றார் ஆறு பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தையான இந்த ஆட­வர். நீரோட்­டம் உள்ள ஒரு தென்னை மரத்­தில் 20 நாட்­களுக்கு ஒரு முறை இள­நீர் பறிக்­க­லாம். ஒரு குலை­யில் 60 இள­நீர்­வரை­கூட இருக்­கும். நான்கே நான்கு­கூட இருப்­ப­தும் உண்டு.

வழக்கமான தென்னை மரங்கள் தலைமுறை தலைமுறையாகக் காய்க்கும். இப்போது வரும் கலப்பு தென்னை இனங்கள் 15 ஆண்டு கள்தான் காய்க்கின்றன.

கள் இறக்­கும் தொழி­லில் ஈடு­பட்­ட­போது தென்னை, பனை மரங்­களில் நானே ஏறி கலையங்­களைக் கட்டி கள் இறக்குவேன். பெண் பனை மரத்­தில் ஏழு, எட்டு கலை­யங்­கள்­கூட கட்­ட­லாம்.

காலை­யில் 20 லிட்­டர் அளவுகூட­ கள் வடி­யும். மாலை­யில் 15 லிட்­டர் வடி­யும். ஆண் பனை மரத்­தில் குறை­வா­கவே கள் வடி­யும். தென்­னங்­கள் உட­லுக்கு அசுர தெம்பு. ராஜபோதை தரும். பனங்­கள் வாயு அதி­கம். இருந்தாலும் இரண்­டுமே இயற்கை மருந்­து­ என்று திரு ­சந்­தி­ர­காசு தெரி­வித்­தார்.

இளநீர் வியாபாரி இப்படி தெரி வித்த வேளையில், குறுக்கிட்ட சண்முகவேலு, என்னைப் பார்த்து, 'ஐயா பதநீர் குடித்துப் பாருங்கள்,' என்றார்.

திரு சண்முகவேலு அதே சாலை முக்கூட்டில் அதே மர நிழலில் இளநீர் வாகனத்திற்கு அருகே தன் சைக்கிளை நிறுத்தி பதநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

கோடை வெப்பம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு வெய்யில் அதிகம் என்று முன்னுரைத்து இருக்கிறார்கள். குளுகுளு காரில் கூட போக முடியவில்லை. இங்கு யார் வந்தாலும் இளநீர், பதநீர் குடித்து உடல் வெப்பத்தைத் தணித்து விட்டு போகலாம். இது உறுதி என்றார், சண்முகவேலு.

தமிழ்நாட்டில் கள், பதநீர் இறக்க தடை உள்ளது. ஆகையால் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள பிரஞ்சு எல்லைக்குட்பட்ட காரைக் கால் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அன்றாடம் சுமார் 5 முதல் 10 லிட்டர் பதநீர் வாங்கி வருவேன்.

லிட்டர் 50 ருபாய்க்கு வாங்கி ரூ.100 க்கு விற்பேன். பதநீர் பற்றி தெரிந்தவர்கள் விரும்பி வாங்கிக் குடிப்பார்கள்.

தென்னை, பனை மரங்­களில் கலை­யத்­தைக் கட்டி கள் இறக்­கும்­போது கலை­யத்­திற்­குள் சுண்­ணாம்பு பூசிவிட்­டால் வடி­யும் நீர் காற்­றில் வினை புரிந்து கள்­ளாக மாறாது. பதி­லாக அது பத­நீ­ரா­கி­வி­டும். போதை இருக்­காது.

பத­நீரில் சுண்­ணாம்பு சத்து அதி­கம் எலும்­புக்கு நல்­லது. புற்­று­நோய்க்கு எதி­ரான சிறந்த மருந்து. உட­லுக்கு குளு­மை­யா­னது என்று சண்­முக­வேலு விளக்­கி­னார்.

இள­நீர் குடித்­தால் உடல் தோள் மினு­மி­னுப்பு கூடும். உடல்­வெப்­பம் குறை­யும். தாதுப் பெருள்கள் உண்டு. இவற்­றோடு மருத்துவக்­கு­ணங்­களும் தேவை எனில் பத­நீர்­தான் கைகண்ட வைத்­தி­யம் என்­றார் திரு சண்­மு­க­வேலு.

என்­னு­டைய உற­வி­னர் காரைக்­கால் அருகே கள் இறக்­கும் தொழி­லில் ஈடு­பட்டு வரு­வ­தால் எனக்கு அன்­றா­டம் பிரச்­சினை இல்­லா­மல் பத­நீர் வந்­து­வி­டும் என்று அவர் மேலும் கூறி­னார்.

பத­நீரை குழந்தை­கள் முதல் பெரி­யவர்­கள் வரை யார் வேண்டு­மா­னா­லும் பரு­க­லாம். ஒரு கோப்பை ரூ.20க்கு விற்­கிறேன். இள­நீரும் ரூ.25 முதல் ரூ.30க்கு இங்கேயே கிடைக்கும் என்று இவர் பெருமை யாகத் தெரி­வித்­தார்.

இப்­ப­டித்­தான் எங்­கள் வாழ்க்கை ஓடு­கிறது என்று சண்­மு­க­வே­லு­வும் சந்­தி­ர­கா­ச­னும் சேர்ந்து கூறி­யது, அப்­போது இள­நீர், பத­நீர் குடித்­துக் கொண்டு இருந்த பல­ரின் காதிலும் விழுந்து இருக்­கும்.

இந்த நவீன காலத்­தில் இளை­ஞர்­கள், படித்­த­வர்­கள் எல்­லா­ரும் போத்­த­ல் குளிர்­பா­னத்தை, திடீர் உண­வு­களை அதி­கம் விரும்­பு­கிறார்­கள். அதற்­காக அதி­க­மாக செல­வி­டு­கி­றார்­கள். அத்­த­கைய உண­வைப் பயன்­ப­டுத்­து­வால் பாதிப்­பு­தான் அதி­கம் என்­ப­தைத் தெரிந்தும் அவர்­கள் அவ்­வாறு செய்­கி­றார்­கள்.

ஆனால் நாங்­கள் அப்­படி அல்ல. மன­சாட்­சி­யு­டன் தொழில் செய்­கிறோம். இயற்­கை­யி­லேயே கிடைக்­கின்ற, கலப்பு இல்­லாத, உடல்­ந­ல­னுக்கு ஏற்ற, சத்­துள்ள பானத்தை கட்­டுப்­ப­டி­யா­கக் கூடிய விலை­யில் மக்­க­ளுக்குக் கொடுக்­கி­றோம்.

இதன் மூலம் எங்­க­ளுக்கு வரு­மா­னம் கிடைக்­கிறோ இல்­லையோ மருத்துவர்போல் செயல்படுகிறோம் என்ற மன­நி­றைவு கிடைக்­கிறது என இந்த இரு­வ­ரும் கூறி­யது மறுக்க இய­லாத ஒன்­றா­கத்­தான் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!