சென்னையின் மிக நீளமான மேடவாக்கம் மேம்பாலம் திறப்பு

சென்னையின் மிக நீளமான மேடவாக்கம் மேம்பாலம் திறப்பு

1 mins read
2b7fdb6b-2672-4f6c-b23b-7d9b6df4c546
-

சென்­னை­: சென்­னை­யின் மிக நீள­மான மேட­வாக்­கம் மறை­மலை அடி­கள் மேம்­பா­லத்தை நேற்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேரில் வந்து திறந்து வைத்­தார்.

அதன்­பி­றகு புதிய பாலத்­தின் மீது நடந்து ஆய்வு மேற்­கொண்­டார்.

தாம்­ப­ரம்-வேளச்­சேரி சாலை­யில் ஏற்­படும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் இந்தப் புதிய மேம்­பா­லம் கட்­டப்­பட்­டுள்­ளது.

வேளச்­சேரி-தாம்­ப­ரத்­துக்கு இடையே 2.03 கிலோ மீட்­டர் நீளத்­தில் பாலம் கட்டப்­பட்டு உள்­ளது.

இத­னால், வேளச்­சேரி, சோளிங்­க­நல்­லூர், தாம்­ப­ரம் உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்­குச் செல்­லும் மக்­கள் போக்­கு­வ­ரத்து நெரி­சல் இன்றி பய­ணம் செய்­ய­மு­டி­யும் என கூறப்­ப­டு­கிறது.

ரூ.95.3 கோடி செல­வில், 1.30 லட்­சம் பய­ணி­க­ளுக்குப் பய­ன் அளிக்கும் வகை­யில் இந்த மேம்­பா­லம் கட்­டப்­பட்­டுள்­ளது. இது­வரை சென்­னை­யில் அமைக்­கப்­பட்ட பாலங்­களில் மிக­வும் நீள­மான பாலம் என்ற சிறப்­பையும் இப்பாலம் பெற்­றுள்­ளது.