65 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அசைவ விருந்து

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற ஊர்த் திருவிழா ஒன்றில் மொத்த ஊருக்கும் அசைவ விருந்து கொடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகே உள்ள கெத்து வாசல்பட்டி கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் தடைபட்டுப் போனது.

இந்நிலையில், 65 ஆண்டுகளுக் குப்பின் அசைவ விருந்து வைத்து ஒரு பெரும் திருவிழாவாக அங் குள்ள மக்கள் கொண்டாடினர்.

திருவிழாவுக்காக பத்திரிகை கள் அடித்து, அழைப்பு கொடுத்தனர்.

கோவில் திருவிழாவில் ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு பாரம்பரிய முறைப்படி குழம்பு, வறுவல் செய்யப் பட்டது. வீட்டுக்கு வீடு நடைபெற்ற கறி விருந்தில் நண்பர்களும் சொந்தங்களும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு சாப்பிட்டனர்.

அதோடு இனிப்புகள், 3 தொட்டுக் கொள்ளும் உணவுகள் என்று பிரம்மாண்டமாக விருந்து தயார் செய்யப்பட்டது. இந்த உணவு கிட்டத்தட்ட 1,000 வீடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்காக பெரிய பந்தல் போடப்பட்டு விருந்து தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பந்தலில் எல்லோரும் அமரமுடியாது என்ப தால் எல்லோரின் வீடுகளுக்கும் முன்பும் ஆங்காங்கே பந்தல் போடப்பட்டு அசைவ விருந்து நடந்தது. கறிக்குழம்பு, கறி வருவல், மீன் வருவல் என சமையல் கலை ஞர்கள் கைவண்ணத்தால் கெத்து வாசல்பட்டி கிராமமே கமகமத்தது. விவசாயம் செழிக்கவேண்டும், மழை பெய்யவேண்டும் என்பதற்காக இத்திருவிழா கொண்டாடப்பட்டதாக கிராமமக்கள் கூறினர்.

இந்த விருந்தால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 500 சமையல் கலைஞர்கள் பயனடைந்தனர். இனி ஆண்டு தோறும் இந்த கறிவிருந்தை தொடரவும் கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!