அமைச்சர்: ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை

சென்னை: திரா­விட மொழிக்­கும் சிந்து சம­வெளி நாக­ரி­கத்­துக்கும் உள்ள தொடர்­பு­கள் குறித்து தொடர்ந்து ஆய்­வு­கள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக தமி­ழக தொழில், தொல்­லி­யல்­துறை அமைச்­சர் தங்கம் தென்­ன­ரசு தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற 'என்னே விந்தை இந்த ஹரப்பா நாக­ரி­கம்' என்ற நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர், ஹரப்பா நாக­ரி­கம் குறித்த பல புதிர்­கள் இன்­றும் விடு­விக்கப்­ப­ட­வில்லை என்­றார்.

"தென் தமி­ழ­கத்­துக்­கும் சிந்து சம­வெளி நாக­ரி­கத்­துக்­கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்­வு­ செய்ய தமி­ழக அரசு ரூ.77 லட்­சம் ஒதுக்கீடு செய்­துள்­ளது. இதே­போல, சங்­க­கால துறை­மு­கப் பட்­டி­னங்­கள் தொடர்­பாக அக­ழாய்வு செய்­தால், தமி­ழர்­க­ளின் வணி­கம் தொடர்­பான ஏரா­ள­மான தக­வல்­கள் கிடைக்க வாய்ப்­புள்­ளது," என்­றார் அமைச்­சர் தென்­ன­ரசு.

இந்­திய தொல்­லி­யல் ஆய்வகத் தலைமை இயக்­கு­ந­ராக இருந்த ஜான் மார்­ஷல், சிந்து சம­வெ­ளி­யில் அக­ழாய்வு செய்து நூறு ஆண்டு­களா­கி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்டார்.

ஒவ்­வொரு முறை­யும் அங்கு அக­ழாய்வு செய்­யும்­போது புதிய தக­வல்­கள் கிடைப்­ப­தாகவும் கூறி­னார். மேலும், பாதி அளவுக்­குத்­தான் அக­ழாய்வு நடத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் இன்­னும் ஏரா­ள­மான புதிர்­கள் உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். நூலா­சி­ரி­யர் டி.எஸ்.சுப்­பி­ர­மணி­யன் பேசும்­போது, ஹரப்பா நாக­ரி­கம் தொடர்­பாக 1921இல் அக­ழாய்வு செய்­யப்­பட்­டது என்றும் அதன் நினை­வாக இந்த நூல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!