பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு; ஆளில்லா வானூர்தி மூன்று நாள் பறக்கத் தடை சென்னையில் தொடங்கியது ஜி-20 கல்வியாளர்கள் மாநாடு

சென்னை: உலக நாடு­கள் அங் கம் வகிக்­கும் ஜி-20 மாநாட்­டுக்கு இம்­முறை இந்­தியா தலைமை ஏற்­றுள்­ளது. இந்த மாநாட்­டின் ஓர் அங்­க­மாக, சென்­னை­யில் ஜி-20 கல்­வி­யா­ளர்­கள் மாநாடு நேற்று தொடங்­கி­யது.

மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெற உள்ள இம்­மா­நாட்­டில் ஜி-20 அமைப்­பில் உள்ள 20 நாடு­களில் 16க்கும் மேற்­பட்ட நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள் பங்­கேற்று தங்­கள் நாட்­டுக் கல்­விக் கொள்­கை­கள் குறித்த தக­வல்­க­ளைப் பகிர்ந்து கொள்ள உள்­ள­னர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்­சிப் பூங்கா வளா­கத்­தில் “கல்­வி­யில் மின்னிலக்கத் தொழில்­நுட்­பத்­தின் பங்கு’’ என்ற தலைப்­பில் கருத் தரங்­கம் நடை­பெற்­றது.

இதில், மாநி­லம் முழு­வ­தும் இருந்து 200 மாண­வர்­களும் சென்னை ஐஐ­டி­யில் பயி­லும் 100 மாண­வர்­களும் கலந்­து­கொண்ட னர்.

நாட்­டின் கல்வி வளர்ச்சி குறித்­தும் படிப்பை பாதி­யோடு நிறுத்திவிடு­வ­தைக் குறைப்­பது குறித்­தும் இந்த மூன்று நாள் மாநாட்­டில் ஆலோ­சனை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல் கள் தெரி­விக்­கின்­றன.

ஜி-20 கல்­வி­யா­ளர்­கள் மாநாட்­டில் சென்னை ஐஐடி இயக்­கு­நர் காம­கோடி பேசி­ய­போது, “ஆஸ்­தி­ரே­லியா, சீனா, நெதர்­லாந்து ஆகிய நாடு­கள் ‘டிஜிட்­டல்’ கல்­வி­யில் சிறந்து விளங்­கு­கின்­றன.

“பிரான்ஸ் நாட்­டில் ஆங்­கி­லம் வழி பாடங்­க­ளைப் போதித்­தா­லும் பிரான்ஸ் மொழி பெயர்ப்­புக் கரு­வி­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதற்­காக அந்­நாடு பெரும் தொகையை செல­வ­ழித்து வரு­கிறது,” எனக் குறிப்­பிட்­டார்.

தொடர்ந்து பேசிய அவர், சீனா, நெதர்­லாந்து, பிரான்ஸ், ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­கள் மெய்­நி­கர் வகுப்­ப­றை­களை அதிக அள­வில் உரு­வாக்கி வரு­வ­தா­க­வும் தொழில்­நுட்ப வளர்ச்சி கார­ண­மாக அந்த நாடு­களில் அனை­வ­ருக்­கும் கல்வி தங்கு தடை இன்றி வழங்­கப்­ப­டு­வ­தாக வும் கூறி­னார்.

“தென்ஆப்­பி­ரிக்கா, மொரி சியஸ் போன்ற நாடு­களும் தங்க ளது கல்­விக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்த தீவி­ரம் காட்டி வரு­கின்­றன.

“20,000க்கும் அதி­க­மான உயர்­கல்வி பாடத்­திட்­டங்­க­ளைக் கொண்­டுள்ள சீனா, உயர் கல்வி படிக்­கும் தள­மாக மாறி வரு­கிறது.

“அதே­போல், நெதர்­லாந்து மென்­பொ­ருள் கல்­விக்கு அதிக முக்­கி­யத்­து­வம் தந்து வரு­கிறது.

“பல்­வேறு உயர் கல்வி நிறு வனங்­களை உரு­வாக்கி வரும் இந்­தியா, தொழில்­நுட்­பக் கல்வி மைய­மா­க­வும் மாறி உள்­ளது.

“புதிய கல்­விக் கொள்கை மூலம் அனை­வ­ருக்­கும் சம­மான, தர­மான கல்­வியை இந்­தியா கொடுத்து வரு­கிறது,’’ என்­றார்.

இத­னி­டையே, கல்வியாளர்கள் மாநாட்டை ஒட்டி, ­ சென்­னை­யில் ஆளில்லா வானூர்­தி­கள் எதுவும் மூன்று நாள்களுக்கு பறக்கக் கூடாது என தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சென்னை காவல்­துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!