‘ஆபத்து’ புயல் வலுவடைந்தது

சென்னை: தென்­கி­ழக்கு, மத்­திய கிழக்கு அர­பிக்­க­ட­லில் மையம் கொண்­டி­ருந்த காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லம் புய­லாக வலுப்­பெற்­றுள்­ளது. இந்­தப் புய­லுக்கு ‘பிபோர்­ஜோய்’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு ‘ஆபத்து’ என்று பொருள். இந்­தப் புயல் வலுப்­பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்­புள்­ளது என்­றும் அத­னால் கேரளா முதல் மகா­ராஷ்­டிர மாநி­லம் வரை­யி­லான மேற்­குக் கடற்­க­ரைப் பகு­தி­களில் மழை தீவி­ர­ம­டை­யும் என்­றும் மாநில அள­வி­லான வானிலை ஆய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்து இருந்தனர்.

இதற்கிடையே, மேற்கு-தென்­மேற்­கில் மையம் கொண்­டுள்ள புயல் தீவி­ர­ம­டைந்து வடக்­கில் நகர்ந்து அதி­வே­கப் புய­லாக வலுப்­பெற்­றது. அத­னைத் தொடர்ந்து, நேற்று பிற்­ப­க­லில் கோவா­வுக்கு 860 கி.மீ. மேற்கு-தென்­மேற்­கில் மையம் கொண்­டி­ருந்­தது. அபா­ய­நிலை அதி­க­ரித்­ததை அடுத்து, அர­பிக்­க­ட­லின் ஆழ்­க­டற்­ப­கு­தி­யில் உள்ள மீன­வர்­கள் உடனே கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறி­வு­றுத்­தி­யது.

அர­பிக்­க­ட­லில் உரு­வான புயல் தீவிர புய­லாக வலு­வ­டைந்­த­தை­யொட்டி தமிழ்­நாட்­டில் 4 மாவட்­டங்­க­ளுக்கு பர­வ­லாக மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், சென்னை நகர்ப் பகுதி முழு­வ­தும் திங்கள், செவ்வாய் இருநாள்களும் பெய்த மழை வரும் நாள்களில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புற­ந­கர்ப் பகு­தி­க­ளான தேனாம்­பேட்டை, மெரினா, நுங்­கம்­பாக்­கம், சைதா­ப்பேட்டை, ஆழ்­வார்­ப்பேட்டை, அண்­ணா­சாலை, புர­சை­வாக்­கம், அய­னா­வ­ரம், வட­ப­ழனி உள்­ளிட்ட பல பகு­தி­களி­லும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!