கஞ்சாவுடன் பிடிபட்ட போலி காவல்துறை அதிகாரி

சேலம்: காவல்துறை அதிகாரியைப் போல வேடம் போட்டு பலரையும் ஏமாற்றிய சேலம் தர்மபுரியைச் சேர்ந்த ஓர் ஆடவர் கடைசியில் கஞ்சா கடத்தி சிக்கினார்.

அப்துல் முகீத், 24, என்ற அந்த நபர் காவல்துறை அதிகாரிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை வைத்துக்கொண்டு சென்னையில் பலரையும் மிரட்டி பல வேலைகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி பொறியியல் படிப்பில் தனக்குத் தெரிந்த ஒருவரை அந்த மோசடிப் பேர்வழி சேர்த்துவிட்டதாக புகார் தாக்கலானது.

அதன் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறை, அப்துல் முகீத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த நபர் போலி காவல்துறை அதிகாரியைப் போல நடித்து பலரையும் ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

அப்துல் முகீத்துக்கும் சிறையில் இருந்த பல ரவுடிகளுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஈரோட்டில் கொடுத்தால் ரூ.10,000 கிடைக்கும் என்று சிறையில் இருந்த ரவுடிகள் கூறியதைக் காதில் வாங்கிக்கொண்ட அப்துல் முகீத், தான் சிறையில் இருந்து விடுதலையானதும் கஞ்சா கடத்தலில் இறங்கினார்.

தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு திரிந்த அவர், ரயில்களில் பல முறை ரகசியமாக கஞ்சா கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே தென் மாவட்டங்கள், கேரளாவிற்கு செல்லும் ரயில்களை போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் கடுமையாகச் சோதனையிட்டு வந்தனர்.

தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் பயணம் செய்த அப்துல் முகீத் 5 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்.

அவர் தான் செய்த குற்றங்களை எல்லாம் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.

இப்போது அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அப்துல் முகீத்துடன் கஞ்சா கடத்தலில் சம்பந்தப்பட்டு இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க அதிகாரிகள் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!