ரஷ்யா

கியவ்: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரேன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவிக்கிறது.
மாஸ்கோ: உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் தனது ராணுவத்துக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பிவைக்க ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆயுதங்களை உற்பத்தி செய்து விரைவாக அனுப்பிவைக்கும்படி ரஷ்ய ஆயுத ஆலைகளுக்கு அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொய்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கியவ்: ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறி உக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய 98 வயது உக்ரேனிய மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்ய ராணுவத்துக்குப் பணம் அனுப்பிவைக்கும் நோக்குடன் ரஷ்ய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் 65 மில்லியன் அமெரிக்க டாலர் (S$88 மில்லியன்) பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியவ்: உக்ரேனின் நிப்ரோபெட்ரொவ்ஸ்க் வட்டாரத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டுப் பேர் மாண்டனர்.