You are here

உல‌க‌ம்

மலாக்கா ஜனநாயக செயல் கட்சியில் விரிசல்

மலாக்கா: மலாக்காவில் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவரும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் விலகியதால் அக்கட்சியில் விரி சல் அதிகரித்துள்ளது. கோத்தா மலாக்கா நாடாளு மன்ற உறுப்பினர் சிம் டோங் ஹிம், பாச்சாங் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் லிம் ஜாக் வோங், கெசிடாங் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சின் சூன் சியோங், டுயோங் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ லியோங் சான் ஆகிய நால்வரும் தலைமைத் துவம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகியதாகக் கூறினர்.

பாக்தாத் மோதலில் ஐவர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக் தாத்தின் உயர் பாதுகாப்பு வட் டாரத்தில் நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர். இதே பகுதியை அடுத்தடுத்து ஏவுகணைகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்புமிக்க இந்த வட்டாரத்தில் அரசாங்கக் கட்ட டங்கள், வெளிநாட்டுத் தூதரகங் கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சனிக்கிழமை அன்று தேர்தல் சீர்திருத்தத்துக்கு கோரிக்கை விடுத்த ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாது காப்பு வட்டாரத்துக்குள் நுழைய முயன்றனர்.

அதிபர் டிரம்ப்: ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப் பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே, தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேசி வரும்வேளையில் வடகொரியா ஏவுகணைச் சோத னையை நடத்தி மிரட்டல் விடுத்து உள்ளது. இதற்கு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பானிய பிரதமர் அபே, “ஏற்றுக்கொள்ள முடியாத செயல்,” என்றார். அதே சமயத்தில் ஜப்பானுக்குப் பக்கபலமாக அமெரிக்கா 100 விழுக்காடு உள்ளது என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப், பிரதமர் அபே: வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவோம்

வா‌ஷிங்டன்: வெள்ளை மாளிகையில் சந்தித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபேயும் இரு தரப்பு வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப் படுத்த உறுதி தெரிவித்தனர். அமெரிக்கா பாரம்பரியமாக ஜப்பானின் பாதுகாப்புக்கு அரணாகத் திகழ்ந்து வருகிறது. இதற்காக ஜப்பானில் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பு ஏற்ற திரு டிரம்ப், இந்தக் கடப்பாடு குறித்து கேள்வி எழுப்பி யிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது.

நேருக்கு நேர் வந்த அமெரிக்க, சீன விமானங்கள்

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடற்கரைப் பகுதியில் சீன ராணுவ விமானமும் அமெரிக்க கண் காணிப்பு விமானமும் பாதுகாப் பற்ற முறையில் நெருக்கமாக எதிர் எதிரே பறந்து சென்றன என்று அமெரிக்க பசிபிக் படைத் தளம் தெரிவித்தது. பிலிப்பீன்சும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் ‘ஸ்கார் பருக் ஷோல்’ என்ற தீவுக்கு அருகே இரு விமானங்களும் 300 மீட்டர் இடைவெளியில் பறந்தது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜெஃப் டேவிஸ் கூறினார்.

டிரம்ப்: புதிய பயணத் தடை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைய குறிப்பிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்க ளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நீதி மன்றம் முட்டுக்கட்டை போட்டுள் ளது. இதனால் புதிய பயணத் தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் ஆராய்ந்து வருகிறார். ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத் தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறினார். அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பயணத்தடைக்கு சியாட்டல் நீதி மன்றம் தடை விதித்தது. இதனை சான் ஃபிரான்சிஸ்கோ மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்தது.

நியூசிலாந்து கடற்கரையில் மாண்டு கிடந்த நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள்

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் நூற்றுக் கணக்கான திமிங்கிலங்கள் நேற்று மாண்டு கிடந்தன. கிட்டத்தட்ட 416 பைலட் வகை திமிங்கிலங்கள் கரையோரமாகக் கிடந்ததைக் கண்டு அப்பகுதியில் இருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கடற்கரையில் மாண்டு கிடக்கும் திமிங்கிலங்கள். படம்: ஏஎஃப்பி

டிரம்ப் விதித்த பயணத் தடை தற்காலிக நிறுத்தம்: உறுதிப்படுத்திய நீதிமன்றம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் விதித்த பயணத் தடையை அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளது. இதற்கு அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றமும் இணக்கம் தெரிவித்து பயணத் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் பயணிகளும் அகதிகளும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.

ஒரே சீனா கொள்கையை மதிக்க டிரம்ப் ஒப்புதல்

வா‌ஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான தமது முதல் தொலைபேசி உரையாடலின்போது ஒரே சீனா கொள்கையை மதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இருநாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் பேசியதாக தெரி விக்கப்பட்டது. அண்மையில் தைவான் நாட்டுத் தலைவருடன் டிரம்ப் பேசியதாலும் ஒரே சீனா கொள் கையை அமெரிக்கா ஏற்கத் தேவையில்லை என்று டிரம்ப் கூறியிருந்ததாலும் சீனா அதிருப்திக் குரல் எழுப்பி இருந்தது. தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளை ஒரே சீனா கொள்கையின்கீழ் தமது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது.

டிரம்ப்: சீனாவுடன் கட்டுக்கோப்பான உறவை விரும்புகிறோம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுடன் ஒரு கட்டுக்கோப்பான உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு நாடுகளும் பயன்பெறும் என்று சீன அதிபர் ஸி ஜீன்பிங்குக்கு நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்து சீன அதிபர் ஸி எழுதிய கடிதத்திற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு சீனப்புத்தாண்டு கொண்டாடும் சீன மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

Pages