You are here

உல‌க‌ம்

களையிழந்து கிடக்கும் கிள்ளான் லிட்டில் இந்தியா

கிள்ளான்: தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலை யில் மலேசியாவின் கிள்ளான் லிட்டில் இந்தியா வட்டாரம் களை யிழந்து காணப்படுகிறது. தீபாவளி அலங்காரமோ, வண்ண விளக்குகளோ இல் லாமல் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடியுள்ளது என்று அவ் வட்டார வியாபாரிகள் பொருமி யிருக்கின்றனர். கிள்ளான் லிட்டில் இந்தியா வியாபாரிகள் சங்கத்தின் தலை வர் என். பி. ராமன், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இரண்டு வாரத்திற்கு முன்பே லிட்டில் இந்தியா வட்டாரம் பெரும் திரளான மக்களுடன் சுறுசுறுப்புடன் இயங்குவது வழக் கம் என்று குறிப்பிட்டார்.

ஜப்பான் பூங்காவில் குண்டு வெடிப்பு; ஒருவர் மரணம், மூவர் காயம்

ஜப்பான் பூங்காவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் ஒரே சமயத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மூவர் காயம் அடைந்தனர் என்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது. தோக்கியோவிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள உட்சுனோமியாவில் உள்ள பூங்காவில் இரண்டு இடங் களில் ஒரே சமயத்தில் உள்ளூர் நேரப்படி 11.30 மணி அளவில் குண்டுகள் வெடித்தன.

டிரம்ப் வெளியிட்ட முதல் 100 நாள் திட்டம்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். படம்: பால் ஸாக்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லரி கிளிண் டனைவிட பின்தங்கியிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்ப், தாம் அதி பரானால் முதல் 100 நாட்களில் அமலாக்கும் திட்டங்களை வெளி யிட்டுள்ளார். அதிபர் தேர்தலுக்-கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் டோனல்ட் டிரம்பின் பிரசாரம் புதுப் புது சர்ச்சைகளைக் கிளப்பி வரு கின்றன. இந்த நிலையில் பென்சில் வேனியாவில் பேசிய திரு டிரம்ப் தாம் அறிமுகப்படுத்தும் மாற்றங் களைப் பட்டியலிட்டுள்ளார்.

மோசுலுக்கு அருகே உள்ள பர்ட்டாலா நகரம் ஈராக் வசம்

பர்ட்டாலா நகரில் ஈராக்கிய இராணுவத்தினர்.

அர்பில்: கிழக்கு ஈராக்கில் மோசுல் நகருக்கு அருகேயுள்ள கிறிஸ்துவ நகரான பர்ட்டாலாவை ஈராக்கின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து வியாழக்கிழமை கைப்பற்றியதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது. இந்த நகரத்தை சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்பொழுது அதில் வசித்து வந்த ஏறக்குறைய 10,000 பேர் அந்நகரிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

‘கூட்டணிக் கடப்பாடுகளை அமெரிக்கா கட்டிக் காக்கும்’

பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ

அங்காரா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ அமெரிக்காவிடம் இருந்து தமது நாடு பிரிந்துவிட்டதாகக் கூறி சீனாவுடன் நட்புப் பாராட்டி வரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டுடனான தமது கடப்பாடுகளை அமெரிக்கா கட்டிக் காக்கும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறியுள்ளார்.

சீனாவுடன் தமது நாடு அணி சேர்ந்துள்ளதாக அதிபர் டுட்டர்டெ தெரிவித்துள்ளது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திரு கார்ட்டர், “எந்தவொரு நாட்டுடனான உறவும் பரஸ்பரத்தன்மை உடையது. இதன் தொடர்பில், நாங்கள் பிலிப்பீன்ஸ் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடு படுவோம்,” என்றார்.

யிங்லக் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ர

பேங்காக்: தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ர அமல்படுத்திய அரிசி மானியத் திட்டம் தொடர்பாக தமது சொத்துகளை பறிமுதல் செய்ய நாட்டின் ராணுவ ஆட்சி மன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். அத்துடன், அபராதத் தொகை யாக 35 பில்லியன் பாட் (S$1.38 பில்லியன்) கட்டவும் தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ர சந்தை விலைக்கு அதிகமாக அரிசியை விவசாயிகளிடமிருந்து வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

2017 மலேசிய வரவு செலவுத் திட்டம்: பற்றாக்குறையை கட்டுப்படுத்த தொடர் முயற்சி

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட் 656 பில்லியனுக்கு (S$218 பில்லியன்) பெருகிவிட்ட நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்படி, நேற்று 2017ஆம் ஆண்டுக்கான மலேசிய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமரும் நிதியமைச்சரு மான நஜிப் துன் ரசாக், பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற் பத்தியில் மூன்று விழுக்காடாக குறைக்கப்படும் என்று கூறினார். அத்துடன், 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.4% உயர்ந்து மலேசிய ரிங்கிட் 260.8 பில்லியனாக (S$86.95 பில்லியன்) இருக்கும் என்று திரு நஜிப் தெரிவித்தார்.

இறுதிச் சுற்று விவாதத்தில் ஹில்லரி- டிரம்ப் மோதல்

லாஸ் வேகசில் நடந்த இறுதிச் சுற்று விவாதத்தில் பங்கேற்ற ஹில்லரியும் டிரம்பும். படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் வேளையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனுக்கும் குடிய ரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்புக்கும் இடையே நடந்த இறுதிச் சுற்று நேரடி விவாதத்தில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். முதல் இரண்டு விவாதங்களைப் போலவே இந்தச் சுற்றிலும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளே அதிமாக இடம்பெற்றன. இவ்விரு வேட்பாளர்களுக்கு இடையில் மூன்றாவது சுற்று விவாதம் புதன்கிழமை லாஸ் வேகசில் நெவடா பல்கலைக்கழகத்தில் நடந்தது. விவாதத்தின்போது தேர்தல் முடிவை ஏற்றுக்கொள் வாரா, மாட்டாரா என்பது குறித்து டிரம்ப் பதில் கூற மறுத்துவிட்டார்.

ஜகார்த்தா: ஆயுதம் வைத்திருந்த ஒருவர் சுட்டுக் கொலை

போலிசார் தாக்கப்பட்ட இடத்தில் வெடிகுண்டு நிபுணர் ஒருவர் சோதனை செய்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: கத்திகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த ஒருவரை இந்தோனீசியப் போலி சார் சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். குழாய் வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் வைத் திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட அந்த நபர், ஜகார்த்தா அருகே போலிஸ் அதிகாரிகள் மூவரை கத்தியால் தாக்கியபோது போலிசார் அவரை சுட்டுக் கொன்றதாக ஜகார்த்தா போலிஸ் பேச்சாளர் அவி சிடியோனோ கூறினார்.

அந்த நபர், போலிசார் மீது இரண்டு குழாய் வெடிகுண்டு களை வீசியதாக அப்பேச்சாளர் சொன்னார். சுட்டுக்கொல்லப் பட்ட அந்த நபர் ஐஎஸ் ஆதர வாளர் என்று நம்பப்படுகிறது.

ஜகார்த்தா தாக்குதலுக்கு காரணமான போராளிக்கு 10 ஆண்டு சிறை

ஜகார்த்தா: ஜகார்த்தா தாக்கு தலுக்கு காரணமான உள்ளூர் போராளி டோடி சுருடிக்கு (23) ஜகார்த்தா நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். அந்த் தாக்குதலில் ஈடுபட்ட நால்வர் உள்பட 8 பேர் அதில் உயிரிழந்தனர். அத்தாக்குதலுக்கு உள்ளூர் தீவிரவாதிகளே காரணம் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் அத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகப் பேர்வழியான 47 வயது அலி ஹம்வாக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pages