You are here

திரைச்செய்தி

ஜோதிகா படத்தில் மீண்டும் சிம்பு

சிம்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவும் ஜோதிகாவும் திரையில் இணைந்துள்ளனர். தற்போது இருவரும் மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜோதிகா நாயகியாக நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் சிம்பு. அண்மையில் அதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. அப்போது சூர்யா, ஜோதிகா, சிம்பு மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா கணவராக விதார்த் நடிக்கிறார். தனஞ்செயன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஓவியாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் டுகோள்

நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் காதலிக்கிறார்களா என்பது அவர்களுத்தான் வெளிச்சம். எனினும் இருவரும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஜோடியாகச் சுற்றித் திரியும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான நடிகர் ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. ஆனால், ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பாரதிராஜா மகன் மீது வழக்கு

சென்னை: இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி, சமுத்திரம் உள் ளிட்ட பல படங்களில் மனோஜ் நடித்துள்ளார். சம்பவத்தன்று சென்னை ஸ்டெர்லிங் சாலையில் விலை உயர்ந்த ‘பிஎம்டபிள்யூ’ சொகுசு காரை அவர் ஓட்டிச் சென்றுள் ளார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மனோஜ் குமாரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் மது அருந்தி யிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

‘நட்புனா என்னானு தெரியுமா’

கவின், ரம்யா நம்பீசன்

‘சரவணன் மீனாட்சி’ தொலைக் காட்சித் தொடர் மூலம் பிரபலமா னவர் கவின். தற்போது ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். இது நட்பு, காதல் ஆகிய இரண்டின் சிறப்பையும் சொல்லும் படமாம். அதே சமயம் காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தில் கவின் ஜோடி யாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் அருண் ராஜா காமராஜ், ராஜு, இளவரசு, மொட்ட ராஜேந்திரன், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கௌதமின் ஏக்கங்கள்

கௌதம் கார்த்திக்

திரையுலகில் அறிமுகமான போது செய்த தவறுகள் தான் தற்போது தனது வெற்றிக் கான படிக்கட்டுகளாக மாறி இருப்பதாகச் சொல்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக். தற்போது தனது கதைத் தேர்வு, நடிப்பு ஆகியவற்றில் நல்ல முதிர்ச்சி காணப்படுவதற்கு தொடக்க கால தவறுகளே காரணம் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவுக்கு வர வேண்டும், நிறைய படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எந்தத் திட்டமும் போட வில்லையாம். எப்படியோ வாய்ப்பு கிடைத்து திரையுலகில் நீடித்து வருவதாகக் கூறுகிறார் கௌதம் கார்த்திக்.

தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி

ஆங்கிலம் இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார் மகிமா நம்பியார். இந்நிலையில் 10ஆம் தேதி முதல் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு தொடங்குகிறதாம். இதனால் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஒரு மாதத்துக்கு எந்தப் படப்பிடிப்பிலும் மகிமாவைப் பார்க்க முடியாது. தேர்வுக்கேற்ப கால்‌ஷீட் தேதிகளை முன்பே மாற்றிவிட்டாராம். தேர்வு முடிந்ததும், மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் ‘அசுரகுரு’ படத்தில் நடித்து வருகிறார் மகிமா நம்பியார். மேலும் இரு தமிழ்ப் படங்களிலும் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.

நயன்தாராவை மெச்சும் விக்னேஷ் சிவன்

 விக்னேஷ்

‘கோலமாவு கோகிலா’ படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நயன் தாராவை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். “புதிய திறமை மீதான உனது நம்பிக்கை, புதிய கதைகளைத் தேர்வு செய்வது, திரையில் நீ சென்று கொண்டிருக்கும் பாதை ஆகியவை உண்மையில் வெகுவாக ஊக்கமளிக்கிறது. இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்குத் தெரிந்த சங்கதிதான்.

மல்லிகா ஷெராவத்: தொல்லை செய்தனர்

மல்லிகா ஷெராவத்

தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். இந்தி திரையுலகைச் சேர்ந்த கதா நாயகர்கள் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லை கள் ஏற்படுவதாக ஹாலிவுட் முதல் போலிவுட் வரை பலரும் வெளிப் படையாகப் பேசி வருகின்றனர். அண்மையில் ஹாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து பேசத் துவங்கியது முதல் இந்தி நடிகைகளும் வெளிப்படையாக இத்தகைய புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்தியில் ‘மர்டர்’ படம் மூலம் அறிமுகமானவர் மல்லிகா ஷெரா வத்.

காசு மேல காசு

‘காசு மேல காசு’ படத்தில் இடம்பெறும் காட்சியில் ஷாருக், காயத்ரி.

அறிமுக இயக்குநர் கே.எஸ். பழனி யின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘காசு மேல காசு’. இது முழுநீள நகைச்சுவைப் படமாம். மயில்சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள் ளார். நேற்று வெளியீடு கண்ட இப்படத் துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தகவல். இதனால் உற்சாகத்தில் உள் ளார் பழனி. இவர் இதற்கு முன்னால் ‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்பள நம்புறாங்க’, ‘கண்டேன் காதல் கொண்டேன்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். தற்போது இயக்கு நராகக் களம் இறங்கியுள்ளார்.

‘கடைக்குட்டி சிங்கம்’

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் குறித்து ரசிகர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு காட்சியில், “சாதியை வைத்து கட்சி நடத்துபவன், சாதியை வைத்து வியாபாரம் செய்பவன், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி அதை வளர்த்து வருபவன்” என்று கோபமாக வசனம் பேசுகிறார் கார்த்தி. எனவே இது விவசாயத்துக்கு ஆதரவாகவும், சாதிப் பிரச்சினையைக் குறித்து பேசும் படமாகவும் உருவாகி உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Pages