மெழுகுச் சிலையாக மீண்டும் 'உயிர்பெற்ற' ஸ்ரீதேவி

மேற்கத்திய நடிகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், உலக அரசியல்வாதிகள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற பற்பல நட்சத்திரங்களின் மெழுகு பொம்மைகளைக் கொண்டிருக்கும் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தின் (madame tussauds) பட்டியலில் நேற்று நடிகை ஸ்ரீதேவியின் உருவத்தில் ஒரு மெழுகுப் பொம்மையும் சேர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மிஸ்டர் இந்தியா எனும் பாலிவுட் திரைப்படத்தின் “ஹவா ஹவாய்” எனும் பாடல் காட்சியில் நடிகை ஸ்ரீதேவி வலம்வந்த அதே தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மெழுகுப் பொம்மை வடிவமைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் ஓர் எதார்த்தமான அனுபவத்தைத் தரும் நோக்கத்தில் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகப் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூருக்கு வந்திருந்தோரிடையே திரட்டிய கருத்தின்படி இந்தியத் திரை உலகில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிரபலமாக இருப்பது தெரிய வந்தது. அவரின் நினைவாக இப்பொம்மை நேற்று சிங்கப்பூரில் வைக்கப்பட்டது.

சிலைக்கான திறப்பு விழா நேற்று செந்தோசாவில் உள்ள ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தில் இடம்பெற்றது.
தம்முடைய குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியைச் சிறப்பித்த திரு போனி கபூர், மனைவி ஸ்ரீதேவி பற்றிய சுவாரசியமான தகவல்களை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக உயிருடன் இருக்கும் பிரபலங்களின் உருவங்களை மெழுகுப் பொம்மைகளாகப் படைத்து வரும் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகம், இந்த முறை காலமான ஸ்ரீதேவியின் உருவத்தைத் தயாரிப்பதில் சவால்களை எதிர்நோக்கியதாக திரு போனி கபூர் கூறினார்.

“ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைச் சென்றடையும் வரை ஸ்ரீதேவி தமது அலங்காரத்தையும் முக ஒப்பனையையும் சரி செய்துகொண்டே இருப்பார்.

அந்த அளவிற்கு எதையும் நுணுக்கமாகப் பார்க்கக்கூடியவர் என் மனைவி. தற்போது அவர் உயிரோடு இல்லாததால் நான் கொடுத்த அவரது புகைப்படங்களை வைத்து தான் வடிவமைப்பாளர்கள் இந்த மெழுகுப் பொம்மையைச் செய்துள்ளனர்,” என்றார் திரு போனி கபூர். என்றுமே தம்முடைய நெஞ்சில் ஸ்ரீதேவி இருக்கிறார் என்றும் அவரது உருவத்தில் ஒரு பொம்மை சிங்கப்பூரில் இருப்பது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார் அவர்.
ஓர் ஆண்டு முயற்சிக்குப் பிறகு முழுமை அடைந்த ஸ்ரீதேவியின் மெழுகுப் பொம்மை ‘மேடம் டுசோட்ஸ்’

அரும்பொருட்காட்சியகத்தில் உள்ள ‘அல்டிமெட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸ்’ பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகம் சிங்கப்பூர் உட்பட நியூயார்க், லண்டன் என உலகின் 24 இடங்களில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!