10 பேருடன் கோயிலில் நடந்த திருமணம்; பெற்றோரும் உற்றாரும் நேரலையில் வாழ்த்து

பெற்­றோர், உற­வி­னர்­கள், நண்­பர்­கள், ரசி­கர்­கள் என ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திறன்­பேசி வழியே நேர­லை­யில் வாழ்த்த நேற்று மன­ம­கிழ்ச்­சி­யோடு மணம் முடித்­த­னர் சத்­தி­ய­மூர்த்தி நாயுடு- நிஷா குமார் தம்­பதி.

உள்­ளூர் தொலைக்­காட்சி நாட­க­உ­தவி இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான 30 வயது சத்­தி­ய­மூர்த்தி, தொலைக்­காட்சி நடி­கை­யான 30 வயது நிஷா­வின் திரு­ம­ணம் ஸ்ரீ வைரா­வி­மட காளி­யம்­மன் ஆல­யத்­தின் சந்­நி­தி­யில் நேற்று நடை­பெற்­றது. காலை 10 மணி முதல் 11.30 வரை நடை­பெற்ற இத்­தி­ரு­ம­ணத்தை இரு­வ­ரது பெற்­றோர் உட்­பட கிட்­டத்­தட்ட 2,400 பேர் நேர­லை­யில் கண்­டு­க­ளித்­த­னர்.

திரு­ம­ணத் தேதி­யைக் கடந்­தாண்டு ஏப்­ர­லில் முடிவு செய்­த­போது 200 பேரு­டன் எளி­மை­யாக திரு­ம­ணத்தை நடத்த முடிவு செய்­தி­ருந்த இத்­தம்­பதி, இவ்­வ­ளவு எளி­மை­யாக மண­விழா நடை­பெ­றும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

கொரோனா கிரு­மிப் பர­ல­வைக் கட்­டுப்­ப­டுத்த விதிக்­கப்­பட்­டுள்ள நட­மாட்­டக் ­கட்­டுப்­பா­டு­க­ளால் 10 பேர் மட்­டுமே திரு­மண நிகழ்­வில் ஒரே நேரத்­தில் கலந்­து­கொள்ள முடிந்­தது.

மலே­சி­யா­வில் விதிக்­கப்­பட்­டுள்ள நட­மாட்­டக்­ கட்­டுப்­பா­டு­க­ளால் மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லத்­தைச் சேர்ந்த நிஷா­வின் பெற்­றோர், உற­வி­னர்­க­ளால் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­ய­வில்லை.

வேலை கார­ண­மாக அண்­மை­யில் தாய்­லாந்து சென்­று­வந்த சத்­தி­ய­மூர்த்­தி­யின் தாயா­ருக்கு வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், திரு­ம­ணத்­திற்கு ஐந்து நாட்­க­ளுக்கு முன்­னர்­தான் ஒரு நேரத்­தில் பத்து பேர் மட்­டுமே கோயி­லுக்­குள் செல்­ல­மு­டி­யும் என்ற விதி­முறை நடப்­புக்கு வந்­தது.

எனவே, சத்­தி­ய­மூர்த்­தி­யின் சின்­னம்­மா­வும் சிற்­றப்­பா­வும் பெற்­றோர் ஸ்தா­னத்­தில் திரு­ம­ணச் சடங்­கு­களில் பங்­கேற்­ற­னர்.

நிஷா­வுக்கு சிங்­கப்­பூ­ரில் வாய்ப்­ப­ளித்த இயக்­கு­நர் பெற்­றோர் ஸ்தா­னத்­தில் கலந்­து­கொண்­டார்.

இவர்­க­ளு­டன் தமது சகோ­த­ரர் உள்­ளிட்ட சில உற­வி­னர்­க­ளு­டன் கேமரா பணி­யா­ளர்­கள் ஆகி­யோர் சேர்ந்து மொத்­தம் பத்து பேரே திரு­ம­ணத்­தின்­போது உடன் இருந்­த­தாக சத்­தி­மூர்த்தி கூறி­னார்.

“மேலும் நெருக்­க­மான 15 நண்­பர்­கள் ஆல­யத்­திற்கு வெளி­யில் காத்­தி­ருந்­த­னர். ஒவ்­வொ­ரு­வ­ரும் தனித்­த­னியே கிட்­டத்­தட்ட ஐந்து நிமி­டங்­க­ளுக்கு உள்ளே வந்­த­னர்,” என்று அவர் தெரி­வித்­தார்.

2015ஆம் ஆண்­டில் சந்­தித்த இவ்­வி­ரு­வ­ரும் 2018, நவம்­பர் மாதம் பதி­வுத் திரு­ம­ணம் செய்து கொண்­ட­னர். சென்ற ஆண்டு முடிவு செய்த திரு­ம­ண­ நாளை மாற்ற இரு­வ­ரும் விரும்­ப­வில்லை.

“திரு­ம­ணத்­தைத் தள்­ளி­வைக்­கா­மல் குறித்த தேதி­யில் நடத்­து­வ­தில் எங்­க­ளது பெற்­றோ­ருக்கு மாற்­றுக்­ க­ருத்து இருக்­க­வில்லை இருந்­த­போ­தும் நேரில் திரு­ம­ணத்­தைக் காண முடி­யாத ஏக்­கத்­தைப் போக்­கு­வ­தற்­காக நேர­லை­யில் ஒளி­ப­ரப்­பும் யோச­னையை புகைப்­பட கலைஞர் கந்­தன் ஜெய் முன்­வைத்­தார்,” என்று நிஷா கூறி­னார்.

“நாங்­கள் இரண்டு கேம­ராக்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னோம். திரு­ம­ணச் சடங்கு எவ்­வித தடங்­க­லும் இல்­லா­மல் ஒளி­ப­ரப்­பா­வதை நானும் சக பணி­யா­ளர் நரேந்­தி­ர­னும் உறுதி செய்­தோம்,” என்­றார் கந்­தன்.

திரு­மண விழா­வின் நேரலை காணொ­ளியை தூரத்­தி­லி­ருந்து கண்டு தங்கள் அன்பைப் பொழிந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோ­ரால் இந்­நாள் மிக­வும் தித்­திப்­பாக அமைந்­த­தா­கக் கூறி­னர் மண­ம­க்கள்.

திரு­ம­ணத்­தின்­போது சடங்­கு­களில் அதி­கம் கவ­னம் செலுத்­தி­ய­தா­கக் கூறிய அத்­தம்­ப­தி­யர், பெரும்­கூட்­டம் நேரில் இல்­லாத குறையை அவ்­வ­ள­வாக உண­ர­வில்லை எனத் தெரி­வித்­த­னர். தெரிந்­த­வர்­களும் தெரி­யா­த­வர்­களும் அனுப்­பிய வாழ்த்­துச் செய்­தி­கள் நெகிழ வைத்­த­தாக தம்­ப­தி­யர் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

#சத்­தி­ய­மூர்த்தி #நிஷா #திருமணம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!