புதிதாக 569 பேருக்குக் கொரோனா

சிங்கப்பூரில் இன்று மதிய நிலவரப்படி புதிதாக 569 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சமூகப் பரவலால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகப் பரவலால் ஏற்பட்டுள்ள புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை  நேற்று நான்கு ஆகப் பதிவானது.

இந்த எழுவரில் ஒருவர் சிங்கப்பூரர். எஞ்சிய அறுவர் வேலை அனுமதி அட்டைதாரர்கள்.  

இதனுடன் சிங்கப்பூரின் கொரோனா நோய்ச்சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 36, 405 ஆகப் பதிவாகியுள்ளது.