மாறுபட்ட முகக் கவசங்கள்

தமிழகத்தின் கோயம்பத்தூரில் பயனீட்டாளர்களின் முகங்களைத் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கும் வகையில் முகக் கவசங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் முகங்களில் முகக்கவசத்தால் மறைக்கப்படும் வாய்ப்பகுதி படம் எடுக்கப்படும் அந்தப் படம்  முக கவசத்தில் அச்சிடப்படுகிறது.

புகைப்பட அரங்கம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முக கவசங்களை அணியும்பொழுது, மூக்கு மற்றும் அதற்கு கீழ் உள்ள முகபாகங்கள், அணிபவரின் உண்மையான நிறம் மற்றும் தோற்றம் வெளிப்படும் வகையில் தெளிவாக உள்ளன.  இதனால் அவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.