வாக்களிப்பு நிறைவு பெற்றது

வாக்களிப்பு நிறைவு பெற்றது

1 mins read
d73734b3-37a8-4038-851c-82cd8217de13
புளோக் 818 தெம்பனிஸ் அவென்யூ 4ல் அமைந்த வாக்களிப்பு நிலையத்தில், வாக்குகள் எண்ணப்படும் நிலையத்துக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஆயத்தம் செய்யும் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வாக்களிப்பு நேரம் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,100 (அனைத்து) வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குப் பதிவு அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றுள்ளது.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இன்னும் சில மணி நேரங்களில் முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் (Sample count results) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தேர்தல் முடிவுகளின் ஒரு குறிப்பீடுதான்; அவை இறுதியான முடிவுகள் அல்ல.

முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அதிகாரபூர்வ முடிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் முரசுடன் தொடர்ந்து இணந்திருங்கள்! https://bit.ly/3gGmzFy

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்