சிங்கப்பூரின் முதல் இந்து சமய விழா: சமூக நல்லிணக்கத்தில் அனைவருக்கும் பொறுப்பு

சிங்கப்பூரின் முத­லா­வது இந்து சமய விழா இம்­மா­தம் 20ஆம் தேதி தொடங்­கி­யது. கொவிட்-19 கார­ண­மாக முற்­றி­லும் இணை­யம் வழி நடந்­து­வந்­துள்ள அந்த விழா இன்­று­டன் முடி­வ­டை­கிறது.

யோகா, உடல் நலம், உட­லு­றுதி, இசை, நட­னம், சிங்­கப்­பூர் கோயில்­கள், கோயில் நிய­தி­கள் போன்ற பல­வும் உட்­பட அந்த விழா­வில் மொத்­தம் 23 நிகழ்ச்­சி­கள் இடம் பெற்­றுள்­ளன.

சிங்­கப்­பூர் இந்து நிலை­யம் ஏற்­பாட்­டில் நடக்­கும் அந்த விழாவை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அங்கீ­கரித்து ஆத­ரவு வழங்­கி­யது.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் விழாவை இந்த மாதம் 20ஆம் தேதி மெய்­நி­கர் நிகழ்ச்­சி­ மூலம் தொடங்கி வைத்­தார்.

அப்­போது அவர் சிங்­கப்­பூ­ரின் பன்­மய சமூ­கத்­தில் சம­யக் குழுக்­கள் மிக முக்­கிய பங்­காற்­று­வ­தாகத் தெரி­வித்­தார்.

பல கலா­சார சமூ­கத்­தில் வாழ்­வதால் நமக்குச் சிறப்­பான வாய்ப்பு இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளாகச் சேர்ந்து செயல்­பட்டு பல கலா­சார, சமய விழாக்­க­ளைக் கொண்டா­டு­வ­தற்­கான வாய்ப்பு நமக்­குக் கிடைப்­பதாக அமைச்­சர் கூறி­னார்.

பல்வேறு இன, சமய சமூ­கங்­களைச் சேர்ந்த மக்­கள், அவர்­களின் நம்­பிக்கை, பழக்கவழக்­கங்­கள் பற்­றிய புரிந்­து­ணர்வை ஆழப்­படுத்­து­வ­தற்கு ஒரு­மித்த முயற்­சி­களை நாம் அனை­வரும் எடுக்க வேண்­டும் என்று அமைச்­சர் டோங் குறிப்­பிட்­டார்.

வலு­வான சமூ­கத்­தின் முது­கெலும்­பாக இருக்­கும் சமூக நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­ப­டுத்­து­வ­தில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பங்­குண்டு என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சமூ­க­மும் சமய அமைப்­புகளும் அமைச்­சு­டன் சேர்ந்து செயல்­பட்டு பரந்த அள­வி­ல் சிங்­கப்­பூரர்களி டையே பல சமய புரிந்துணர்வை பலப்­ப­டுத்த முடி­யும் என்று அவர் அழைப்பு விடுத்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் சமய வழி­பா­டு­கள் மாற்­றம் கண்டு இருப்­ப­தைப் பற்றி குறிப்­பிட்ட அமைச்­சர் டோங், அமைச்­சு­ட­னும் போலி­சோ­டும் சேர்ந்து செயல்­பட்டு பாது­காப்­பு­டன் தீமி­தித் திரு­வி­ழாவை நடத்தி தன் பார­ம்­ப­ரி­யத்தை சைனா டவுன் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் நிலை­நாட்டி­ய­தைச் சுட்டிக்காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!