நாளை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் லீ உரையாற்றுவார்

நாளை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் லீ உரையாற்றுவார்

1 mins read
404ccf8f-db32-4ae6-b53e-b08469d3636b
பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழல் அண்மைய நிலவரம் பற்றியும் அடுத்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் நாட்டு மக்களிடையே நாளை (டிசம்பர் 14) மாலை 5 மணிக்கு உரையாற்ற இருக்கிறார் பிரதமர் லீ சியன் லூங்.

அதனைத் தொடர்ந்து, கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவர்களான சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோர் மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக பிரதமரின் ஃபேஸ்புக் செய்தி குறிப்பிடுகிறது.

கொவிட்-19 பற்றி மக்களிடையே பேசி கொஞ்ச காலம் ஆகியிருப்பதைத் தம் பதிவில் குறிப்பிட்ட திரு லீ, மக்களைப் பதற்றம் இன்றி அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் உரை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

இவ்வாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கொவிட்-19 சூழல் காரணமாக நாட்டு மக்களிடம் பல முறை பிரதமர் லீ உரையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்