சிங்கப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்: வீடுகளில் நாளொன்றுக்கு 8 பேரை மட்டுமே வரவேற்கலாம்

இம்­மா­தம் 26ஆம் தேதி முதல், வீடு­களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் தனிப்­பட்ட நபர்­கள் எட்­டுப் பேரை மட்­டுமே அனு­மதிக்­க­லாம் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

அதே­போல, முடிந்­த­வ­ரைக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு நாளைக்கு அதி­க­பட்­சம் இரண்டு வீடு­க­ளுக்கு மட்­டுமே செல்ல வேண்­டும். சீனப் புத்­தாண்டு காலத்­தில் குடும்ப உறுப்­பி­னர்­களை மட்­டுமே பார்க்­கச் செல்ல வேண்­டும் என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

ஆண்டிறுதி விழாக்­க­ளுக்­குப் பிறகு சமூ­கத் தொற்று அதி­க­ரித்­துள்­ள­தால் பாது­காப்பு நடை­முறை­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

“அதி­க­மான தொடர்­பு­கள், மனித நட­வ­டிக்­கை­க­ளால் எந்­த­ ஒரு தொற்­று­நோ­யை­யும் பரப்­பு­வதற்­கான வாய்ப்பு அதி­கமுள்­ளது. ஒரு மாதத்­திற்கு முந்­தைய நிலை­யு­டன் ஒப்­பி­டும்­போது, சிங்­கப்­பூ­ரில் பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது. மேலும் நிலைமை மிக விரை­வில் மோச­மா­கக்­கூ­டும். குறிப்­பாக சீனப் புத்­தாண்டு காலத்­தில் அதிக தொடர்­பு­ ஏற்­பட வாய்ப்­பு உள்­ளது,” என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரு­மான திரு வோங் சொன்­னார்.

எட்­டுப் பேர் கொண்ட குழுக்­களாக மக்­கள் வெளியே கூட அனு­மதிக்­கப்­பட்­டா­லும் சிங்­கப்­பூரர்­கள் தங்­கள் சமூக வட்­டங்­க­ளைச் சிறி­ய­தாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

உணவு, பானம் உட்­கொள்­ளா­த­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தை­யும் ஒருபோதும் குரல் உயர்த்­தக்­கூ­டாது என்­ப­தை­யும் அவர் நினை­வூட்­டி­னார்.

பாரம்­ப­ரிய சீனப் புத்­தாண்டு விருந்து சடங்­கான ‘யூஷெங்’ கின்­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தை­யும் வழக்­க­மான வாழ்த்­தொ­லி­களை எழுப்­பக்­கூ­டாது என்­ப­தை­யும் மறை­மு­க­மாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த கால­கட்­டத்­தில் சோதனை நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­படும். பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மீறும் தனி­ம­னி­தர்­கள், வர்த்­தக நிறு­வனங்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­சர் வோங் எச்­ச­ரித்­தார்.

கொரோனா இன்­னும் உல­கெங்­கும் தலை­வி­ரித்­தா­டு­கிறது. இது­வரை தொற்­று­நோ­யைக் கட்­டுப்­படுத்­து­வ­தில் வெற்­றி­கண்ட தைவான், ஹாங்­காங் போன்ற நாடு­களும் சீனப் புத்­தாண்டு கொண்­டாட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன.

கடந்த ஆண்டு சீனப் புத்­தாண்­டிற்குப் பிறகு இங்கு கொவிட் -19 பாதிப்பு எப்படி அதி­க­ரித்­தது என்­பதை நினை­வு­கூர்ந்த திரு வோங், அத­னால்­தான் அவ்வாறு ஏற்­ப­டா­மல் தவிர்ப்­ப­தற்­காவே பணிக்­குழு முன்­கூட்­டியே நட­வ­டிக்கை எடுக்­கிறது என்றும் சொன்னார்.

“இவ்வாண்டில் சீனப் புத்­தாண்டு முன்பு போலவே இருக்­காது என்­பதை ஏற்றுக்கொள்ள மன­த­ள­வில் தயார்­ப­டுத்­திக்­கொள்­வோம். நமது அன்­றாட நட­வ­டிக்­கை­கள், தொடர்பு­கள் குறித்து நாம் மிக­வும் கட்டுப்­பாட்­டு­டன் இருக்க வேண்­டும்,” என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இன்­னொ­ரு­வருக்கு கொரோனா பரவும் வாய்ப்பைக் குறைப்­பதே இந்த நட­வடிக்­கை­க­ளின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

உண­வுக் கடைக்­கா­ரர்­கள், உண­வக ஊழி­யர்­கள், கடை உரி­மை­யா­ளர்­கள், சைனா­ட­வு­னி­லும் சுற்று வட்­டா­ரத்­தி­லும் செயல்­படும் உணவு விநி­யோக ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­காக இருநாள் கண்­கா­ணிப்­புச் சோதனை நட­வ­டிக்கை பிப்­ர­வரி 8ஆம் தேதி தொடங்­கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!