வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப் பரிந்துரை

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு ஓய்வூதியக் கணக்குகள் மூலம் சேர்த்த தொகைக்கு இரட்டை வரி விதிக்கும் முறையை ரத்து செய்ய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்து இருக்கிறார்.

2021-22ஆம் ஆண்­டிற்­கான வரவு­செ­ல­வுத் திட்­டத்தை நேற்று தாக்­கல் செய்­த­போது அமைச்­சர் நிர்­மலா இந்த யோச­னையை முன்­மொ­ழிந்­தார்.

“வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­கள் நாடு திரும்­பி­ய­பின், வெளி­நாட்டு ஓய்­வூ­தி­யக் கணக்­கு­கள் மூலம் தாங்­கள் சேர்த்த தொகை தொடர்­பில் பிரச்­சி­னையை எதிர்­கொள்­கின்­ற­னர். வழக்­க­மாக, வரி­வி­திப்­புக் காலத்­தின் பொருத்­த­மின்­மை­யால் இது எழு­கிறது. அத்­து­டன், வெளி­நா­டு­க­ளி­லும் அவர்­கள் வரி செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகை­யால், இரட்டை வரி­வி­திப்­பால் எதிர்­கொள்­ளும் சிர­மங்­களில் இருந்து அவர்­களை விடு­விக்­கும் வகை­யில் அம்­மு­றையை ரத்து செய்­யப் பரிந்­து­ரைக்­கி­றேன்,” என்று அவர் தமது உரை­யின்­போது குறிப்­பிட்­டார்.

வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­கள், வெளி­நா­டு­களில் தாங்­கள் ஈட்­டிய வரு­மா­னத்­திற்கு இந்­தி­யா­வில் வரி­வி­திக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆயி­னும், இந்­தி­யா­வில் அவர்­கள் ஈட்­டும் வரு­மா­னத்­திற்கு அவர்­கள் வரி செலுத்த வேண்­டும். அதா­வது, இந்­தி­யா­வில் பெறும் ஊதி­யம், நிரந்­தர வைப்­புத்­தொகை அல்­லது சேமிப்­புக் கணக்கு மூலம் கிடைக்­கும் வரு­மா­னம், இந்­தி­யா­வில் உள்ள குடி­யி­ருப்­புச் சொத்­து­கள் மூலம் கிடைக்­கும் வரு­மா­னம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு அவர்­கள் வரி செலுத்த வேண்­டும். இப்­போ­தைக்கு, இரட்டை வரி­வி­திப்­புத் தவிர்ப்பு உடன்­பாட்­டின்­கீழ் அவர்­கள் இரு­முறை வரி செலுத்­து­வ­தில் இருந்து நிவா­ர­ணம் கோர­லாம்.

ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில்

16.5 லட்­சம் கோடி ரூபாய் விவ­சா­யக் கடன் வழங்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.

தமிழ்­நாட்­டில் 3,500 கி.மீ., தொலை­விற்கு தேசிய நெடுஞ்­சாலை­கள் அமைக்­கும் பணி அடுத்த ஆண்டு தொடங்­கப்­படும். அதற்­காக ரூ.1.03 லட்­சம் கோடி ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அது­போல, சென்னை மெட்ரோ ரயில் பணி­க­ளின் இரண்­டாம் கட்­ட­மாக, ரூ.63,246 கோடி செல­வில் 118.9 கி.மீ. தொலை­விற்கு இருப்­புப் பாதை அமைக்­கப்­படும்.

கொரோனா தடுப்­பூ­சித் திட்­டத்­திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட தனி­ந­பர் வரு­மான வரி­விலக்கு உச்சவரம்­பில் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­டா­த­தால் மாத ஊதி­யம் ஈட்­டு­வோர் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.

பொது­வாக, வேளாண்மை, சுகா­தா­ரம், அடுத்து நடக்­க­வுள்ள ஐந்து மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி இந்த வர­வு­ செ­ல­வுத் திட்­டம் அமைந்­துள்­ளது என்­பது நிபு­ணர்­க­ளின் கருத்­தாக இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!