உணவுப்பொருள்கள் வீணாவதைத் தடுக்க 'லிட்டில் இந்தியா பசுமைத் திட்டம்'

உணவுப்பொருள்கள் வீணாவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகங்களும் கடைகளும் உறுதி அளித்துள்ளன.

லிட்டில் இந்தியா பசுமைத் திட்டம் மெய்நிகர் கருந்தரங்கு மூலம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மெய்நிகர் கருத்தரங்கில் தேசிய சுற்றுப்புற வாரியம், உணவு விநியோகச் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உரையாற்றினர்.

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை எவ்வாறு உணவு விரயத்தைத் தவிர்க்கலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்தத் திட்டத்துக்கு லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது.

“கடைக்காரர்கள் எவ்வளவுதான் மிகுந்த கவனத்துடன் வியாபாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களின் அளவைத் திட்டமிட்டு வாங்கினாலும் சில சமயங்களில் வியாபாரம் நினைத்தப்படி நடக்கவில்லை என்றால் உணவுப்பொருட்கள் வீணாகும் அபாயம் ஏற்படுகின்றன.

“வியாபாரிகள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களைப் பற்றி லிஷாவுக்கு நன்கு தெரியும். காலாவதி தேதியை நெருங்கும் உணவுப் பொருட்கள் வீணாவதற்கு முன் அவற்றை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு உதவும் வழிவகைகள் பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று லிஷா மகளிர் அணியின் நிறவனரான திருவாட்டி ஜோய்ஸ் கிங்ஸ்லி தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவில் ஏறத்தாழ 70 உணவகங்களும் 200 மளிகைக் கடைகளும் இருப்பதாக அவர் கூறினார்.

உணவு விரயத்தைக் குறைக்க லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை லிட்டில் இந்தியா பசுமைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மெய்நிகர் கருத்தரங்கில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் வெகுவாகப் பாராட்டினார்.

காலாவதி தேதியை நெருங்கும் உணவுப் பொருள்களைக் கழிவு விலையில் அல்லது இலவசமாக வாடிக்கையாளர்களுக்குப் பல கடைகள் தந்துவிடுவதை டாக்டர் கோர் சுட்டினார்.

விற்கப்படாத உணவுப் பொருள்களைச் சேகரித்து சமூகத்துக்கு விநியோகிக்கும் ‘எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ’ எனும் அமைப்புடன் சில கடைகள் இணைந்து செயல்படுதாக அவர் தெரிவித்தார்.

“லிட்டில் இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட உணவு தொடர்பான கடைகள் இருக்கின்றன. உணவு விரயத்தைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

“நிலைமை மோசமடைவவதற்கு முன்பு ஆரம்பத்திலேயே உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதைத் தடுப்பதன் வழி உணவு விரயத்தைத் தவிர்க்கலாம்,” என்று டாக்டர் கோர் கூறினார்.

2019ல் சிங்கப்பூரில் 744,000 டன் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டன. ஐந்தில் ஒரு பங்கு உணவுக் கழிவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. மற்றவை வீசப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!