மலேசியாவில் தடுப்பூசிக்குக் குறைவான முன்பதிவுகள்

கொவிட்-19க்கு எதி­ராக மலே­சியா­வில் தேசிய அள­வி­லான தடுப்­பூசித் திட்­டம் தொடங்கி ஒரு மாதத்­திற்கு மேல் ஆகி­யுள்­ளது. ஆனால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளப் பதிவு செய்­தி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது.

இத­னால் அதன் தடுப்­பூ­சித் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அட்­ட­வ­ணையை அந்­நாட்டு அர­சாங்­கம் முன்­னுக்­குக் கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

இதன்­படி பொது­மக்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டத்­தின் மூன்­றாம் கட்­டத்தை மலே­சியா ஏப்­ரல் மாத இறு­தி­யில் நடை­மு­றைப்­ப­டுத்த இருக்­கிறது.

அடுத்த இரண்டு மாதங்­களில் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்­வோர் விகி­தம் மேம்­ப­ட­வில்லை என்­றால் தடுப்­பூ­சித் திட்­டம் தொடர்­பான கொள்கை மாற்­றத்தை மலே­சிய அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும்.

கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­ய­முள்ள பிரி­வி­ன­ராக மலே­சியா­வின் மூத்த குடி­மக்­கள் அடை­யாளம் காணப்­பட்­ட­னர். இதை­அடுத்து, ஏப்­ரல் மாத நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து அவர்­க­ளுக்­கான இரண்­டாம் கட்­டத் தடுப்­பூ­சித் திட்­டத்தை மலே­சியா நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

ஆனால் மூன்­றில் ஒரு முதி­ய­வர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளப் பதிந்­துள்­ள­னர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வரப்­படி, மலே­சி­யா­வின் 33 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யில் 25 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­னோரே தடுப்­பூ­சிக்­குப் பதிந்­துள்­ள­னர்.

புத்­ரா­ஜயா பகு­தி­யைத் தவிர, பெரும்­பா­லான மாநி­லங்­களில் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்­ளும் விகி­தம் 50 விழுக்­காட்­டைக்­கூட எட்­ட­வில்லை.

எதிர்­வ­ரும் ஜூலை மாதத்­திலும் தடுப்­பூசி தொடர்­பான விகி­தத்­தில் முன்­னேற்­றம் இல்லை என்­றால் தடுப்­பூ­சிக் கொள்­கையை அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்ய வேண்­டி­ இருக்­கும் என்று மலே­சி­யத் தடுப்­பூ­சித் திட்­டத்­திற்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­சர் கைரி ஜமா­லு­தின் கூறி­னார்.

மலே­சியா தனது தடுப்­பூசி விநி­யோ­கத்­தின் பெரும்­ப­கு­தியை ஜூலை மாதத்­தில்­தான் பெற­விருக்­கிறது. மலே­சிய மக்­களில் 80 விழுக்­காட்­டி­னர் அதா­வது 26.7 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தன் மூலம் இவ்­வாண்டு இறு­தி­வாக்­கில் கூட்டு நோயெதிர்ப்பு ஆற்­ற­லைப் பெறும் இலக்கை மலேசியா கொண்­டுள்­ளது.

மலே­சி­யா­வில் தற்­போது தடுப்­பூ­சித் திட்­டம் கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை.

எனி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மக்­களை அர­சாங்­கம் ஊக்­கு­வித்து வரு­கிறது.

மலே­சி­யர்­கள் அனை­வ­ருக்­கும் போது­மான தடுப்­பூ­சி­கள் இருப்­பதை அர­சாங்­கம் உறு­தி­செய்­துள்­ளது. இதன்­படி, பாதிப் பேருக்கு ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூ­சி­யும் மற்­ற­வர்­க­ளுக்கு சீனா­வின் சினோ­வேக் தடுப்­பூ­சி­யும் போடப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!