இனவாதம், வெறுப்புணர்வுக்கு எதிராக சிங்கப்பூரர்கள் ஒன்றுதிரள அழைப்பு

1 mins read

சுவா சூ காங்­கில் நிகழ்ந்த சம்­ப­வம் குறித்து பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதி­வில் வருத்­தம் தெரி­வித்­துள்­ளார். மாது மீது இன­வா­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் தமக்கு ஏமாற்­றத்­தை­யும் பெருத்த கவ­லை­யை­யும் அளிப்

­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தத் தாக்­கு­தல் நமது பல இன சமூ­கத்­திற்­குத் துணை­பு­ரி­யும் ஒவ்­வோர் அம்­சத்­தின் மீதும் நமது பரஸ்­பர மரி­யாதை மீதும் இன நல்­லி­ணக்­கத்­தின் மீதும் நடத்­தப்பட்­டது," என்­றார் திரு லீ.

இதே சம்­ப­வம் தொடர்­பில் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கலா­சார, சமூக, இளை­யர் துறை துணை அமைச்­சர் எல்­வின் டானும் பேசி­னார்.

"கொவிட்-19 கொள்­ளை­நோய் கிரு­மிக்கு எதி­ராக சிங்­கப்­பூர் நம்மை பாது­காக்­கும் அதே­நே­ரம் வெறுப்­பு­ணர்வு என்­னும் கிரு­மிக்கு எதி­ரா­க­வும் நம்மை பாது­காத்­துக்­கொள்­வது மிக­வும் அவ­சி­யம்," என்­றார் அவர்.

இன­வா­தப் போக்­கு­டன் வெறுப்­பைத் தூண்­டும் பேச்சு மற்­றும் குற்­றங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஓர­ணி­யாக சிங்­கப்­பூ­ரர்­கள் திரள்­வது அவ­சி­யம்.

"நாம் தற்­போது அனு­ப­வித்து வரும் ஒட்­டு­மொத்த அமைதி, நல்­லி­ணக்­கம் போன்­றவை சுல­ப­மாக பாதிக்­கப்­ப­டு­வதை நாம் அனு­ம­திக்க முடி­யாது என்றார் அவர்.