ஹவ்காங் புளோக் 506ல் அனைவருக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை

சக்­கர நாற்­கா­லி­யி­லும் கைத்­தாங்­கலாகவும் நட­மா­டும் முதி­ய­வர்­கள் உட்­பட பல­ரும் ஹவ்­காங் அவென்யூ 8ல் உள்ள புளோக் 506ன் வெற்றுத்­தளத்­தில் நேற்று பிற்பகலில் கொவிட்-19 பரிசோத­னைக்­குச் சென்­ற­னர். பாது­காப்பு நட­வ­டிக்­கையை­ முன்னிட்டு, ஓர் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் வசிக்­கும் அனை­வரும் கட்­டாய கிருமி பரிசோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­படுவது இதுவே முதல்முறை.

12 மாடி­க­ளைக் கொண்ட இந்த புளோக்­கில் மொத்­தம் 116 வீடு­கள் உள்­ளன. இந்த புளோக்­கில் வசிக்­கும் சில­ருக்கு கிரு­மித்தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் அனைவருக்கும் கிருமி பரிசோதனை செய்யப்படுகிறது. முழுமையான பாதுகாப்பு கவச உடை அணிந்த சுகாதார மேம்பாட்டு ஊழியர்கள் அங்கே இருந்தனர். எனி­னும் எத்­தனை பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்றோ அவர்­களின் விவ­ரங்களோ தெரி­ய­வில்லை என்று அங்கு குடி­யி­ருப்­ப­வர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னர்.

சோதனை முடி­வு­கள் தெரி­யும் வரை­யில் வீட்­டி­லேயே இருக்­கு­மாறு அந்த புளோக்­கில் வசிப்­ப­வர்­களுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

நாளை­யும் சோதனை தொட­ரும் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தது.

அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிரித்­தம் சிங், ஜெரல்ட் கியாம் இரு­வ­ரும் நேற்­றுக் காலை­யில் அந்த புளோக்­கிற்­குச் சென்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­ட­னும் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளு­ட­னும் விவரங்களைக் கேட்­ட­றிந்­த­னர்.

கட்­டாய கிருமி பரிசோதனை பற்றி அறி­விப்­பு­கள் அந்த புளோக்­ கில் ஒட்­டப்­பட்­டுள்­ளன. நேற்று பிற்­ப­கல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை­யி­லும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை­யி­லும் கிருமி பரிசோதனை நடை­பெ­றும் என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!