சமூகத்தில் நால்வர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 13 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,236ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா தொற்றிய 13 பேரில் நால்வர் சமூகத்தினர். அவர்களில் இருவரைத் தொடர்பில்லாத வகையில் கிருமி தொற்றியுள்ளது.

தொடர்புடைய மற்ற இரு பாதிப்புகளில் ஒருவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்; கண்காணிப்புப் பரிசோதனைகள் மூலம் இன்னொருவர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவரையும் கிருமி தொற்றவில்லை.

எஞ்சிய ஒன்பது பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவர்க்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் எழுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!