பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூ­சி­யா­வது போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

சுமார் 36 விழுக்­காட்டு மக்­கள் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டு­விட்­ட­தா­க­வும் அவர் தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கொள்ளை

நோயைச் சமா­ளிக்­கும் வித­மாக புதிய இயல்­பு­நி­லைக்­குத் தயா­ரா­கும் உத்­தி­யின் ஒரு பகு­தி­யாக அண்­மைய வாரங்­க­ளாக சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி நட­வ­டிக்கை வேக­மெ­டுத்து வரு­கிறது. குறிப்­பாக, முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ப­வர்­க­ளுக்கு தேசிய தடுப்­பூ­சித் திட்­டம் முன்­னு­ரிமை அளிக்­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து குறைந்­த­பட்ச பாது­காப்பை அதி­கம் பேர் பெறும் நோக்­கில் இவ்­வாறு செய்­யப்­ப­டு­கிறது.

இது குறித்து நேற்று தமது ஃபேஸ்புக்­கில் கருத்து தெரி­வித்­த அமைச்­சர் ஓங், "இதனை நாம் இன்­னும் வேக­மா­கச் செயல்­ப­டுத்­து­வோம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"இயன்ற வரை நாம் வேக­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும். அதே­நே­ரம் உலக அள­வில் தடுப்­பூ­சிக்­கான தேவை அதி­க­மாக இருப்­ப­தால் அதன் விநி­யோ­கம் நம்­மைக் கட்­டுப்­ப­டுத்­து­கிறது. கூடிய சீக்­கி­ரம் மேலும் அதி­க­மான தடுப்­பூ­சி­க­ளைப் பெறும் வண்­ணம் விநி­யோக நட­வ­டிக்­கையை உறுதி செய்ய நம்­மால் இயன்­ற­தைச் செய்­வோம்.

"எனவே, உங்­க­ளுக்­கான முறை வரும்­போது தய­வு­கூர்ந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளுங்­கள். அத்­து­டன் உங்­க­ளது நண்­ப­கர்­

க­ளை­யும் குடும்­பத்­தி­ன­ரை­யும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கப்­ப­டுத்­துங்­கள்," என்று திரு வோங் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று உலக மக்­க­ளி­டையே தொடர்ந்து இருக்­கும் என்­ப­தன் மீது அனைத்­து­லக நிபு­ணர்­க­ளி­டை­யி­லான கருத்­தி­ணக்­கம் அதி­க­ரித்து வரு­வ­தாக நேற்று முன்­தி­னம் திரு ஓங் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

அதா­வது, சளிக்­காய்ச்­சல் கிருமி போல கொரோனா கிருமி தொடர்ந்து உரு­மாற்­றம் செய்­து­கொண்டு மக்­க­ளி­டையே பர­வி­ய­வண்­ணம் இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­வ­தால் மக்­கள் அதற்­கேற்ற வகை­யில் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொண்டு அந்த சூழ்நிலை­ யோடு வாழக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்.

இதனை நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் வலி­யு­றுத்­திய திரு ஓங், "பரி­சோ­தித்­தல், தொடர்­பு­க­ளைக் கண்­ட­றி­தல், கொவிட்-19 தொற்­றி­ய­வர்­க­ளைத் தனி­மைப்­

ப­டுத்­து­தல் போன்ற நட­வ­டிக்கை

களைக் கடந்த ஆண்டு முதல் சிங்­கப்­பூர் விரை­வா­க­வும் திறம்­ப­ட­வும் செய்து வரு­கிறது. அத்­து­டன், சிறந்த எண்­ணிக்­கை­யி­லான மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்," என்­றார் அவர்.

மேலும் அவர் தெரி­விக்­கை­யில், "இது­போன்ற தற்­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­ப­தால் 'சர்­கிட் பிரேக்­கர்' போன்ற கடும் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டாத வகை­யில் அதிக வர்த்­த­கங்­களை மீண்­டும் திறந்து நமது அன்­றாட வாழ்க்­கைக்­கான நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ரு­வோம் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கிறது.

"இதில் இன்­னும் நாம் முன்­னோக்­கிச் சென்று உணவு, பானக் கடை­க­ளுக்கு உத­வு­வ­தோடு உடற்­ ப­யிற்­சிக் கூடங்­க­ளைத் திறக்­க­வும் நமது பயண நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொட­ர­வும் வேண்­டு

­மா­னால் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் விகி­தம் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும்.

"அப்­போ­து­தான், கிருமி நமது சமூ­கத்­தில் பர­வி­னால்­கூட நாம் சிறப்­பான பாது­காப்­பைப் பெறு­வோம்," என்று திரு வோங் விளக்­கி­னார்.

கடந்த மே மாதம் சிங்­கப்­பூ­ரில் டான் டோக் செங், சாங்கி விமான நிலை­யம் போன்ற கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் புதி­தாக உரு­வெ­டுத்­த­தைத் தொடர்ந்து தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்கு வந்­தன.

இருப்­பி­னும் கடந்த சில வாரங்­க­ளாக அதில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அதன் ஒரு பகு­தி­யாக நாளை திங்­கட்­கி­ழமை முதல் இரு­வர் மட்­டும் உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பிட அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தொற்­றுக்­கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு வோங் இதனை நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார்.

கிரு­மித்­தொற்றை மன­தில் கொண்டு மக்­கள் தங்­க­ளது பணி களை வழக்­கம்­போல தொடர தடுப்­ பூசி விகி­தம் அதி­க­மாக வேண்­டும் என பிர­த­மர் லீ சியன் லூங்­கும் பணிக்­கு­ழு­வி­ன­ரும் மே மாத இறு­தி­யில் கூறி­யி­ருந்­த­னர்.

வோங்: இரு ஊசிகளையும் போட்டுக்கொண்டோர் விகிதம் 36%

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!