16 கடைகளை மூட உத்தரவு; 1,500 பேருக்கு எச்சரிக்கை

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 விதி­முறை­களை மீறி­ய­தற்­காக மொத்­தம் 16 உணவு, பானக் கடை­களை மூடும்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. 1,500 பேர் எச்­ச­ரிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

கொவிட்-19 விதி­கள் மீறப்­ப­ட­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் சுற்­றுக்­கா­வ­லை­யும் பரி­சோ­த­னை­க­ளை­யும் முடுக்­கி­விட்டு இருக்­கி­றார்­கள்.

ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் பிப்­ர­வரி மாதம் நடந்த பிறந்­த­நாள் கொண்­டாட்­டம் ஒன்­றில் கலந்­து­கொண்ட 11 பேருக்குத் தலா $300 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்­தக் கொண்­டாட்­டம் கார­ண­மாக ஆர்ச்­சர்ட் ஹோட்­டல் 30 நாட்­கள் மூடப்­பட்­டது.

இத­னி­டையே, கொவிட்-19 விதி­களை மீறா­மல் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்­ளும்­படி பொது­மக்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

பூங்­காக்­கள், கடற்­க­ரை­கள், கூடைப்­பந்து விளை­யாட்­டுக் கூடங்­கள், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புப் பேட்டை பொது இடங்­கள் போன்ற இடங்­களில் வரும் வாரங்­களில் கடு­மை­யான அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் இடம்­பெறும் என்று அமைச்சு எச்­ச­ரித்­தது.

தண்­டனை பிறப்­பிக்­கப்­பட்ட 16 உணவு, பானக் கடை­கள் வெவ்­வேறான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த இரண்டு பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் ஒரே மேசை­யில் அமர்ந்து சாப்­பிட அனு­ம­தித்து இருந்­தன.

சில கடை­கள் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் அமர்ந்து இருப்­பதை உறு­திப்­ப­டுத்த தவ­றி­விட்­டன. கடை­கள் பொது­வாக 10 நாட்­கள் மூடப்­பட்­டன.

பாலஸ்­டி­யர் ரோட்­டில் உள்ள 'பியூட்டி ஜேட் பார்' என்ற கடைக்கு கூடு­த­லாக $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. மேலும் 13 உணவு, பானக் கடை­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ள­தாக சென்ற வாரம் அமைச்சு தெரி­வித்­தது.

தஞ்­சோங் பகார் ரோட்­டில் உள்ள 'சிக்­கன் அப்' என்ற கடைக்கு மீண்டும் தவறு செய்­த­தற்­காக $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

உணவு, பானக் கடை­களில் இரு வருக்கு மேல் கூடி­ய­தற்­காக, முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தற்­காக மேலும் 15 பேருக்குத் தலா $300 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

தேசிய பூங்­காக் கழ­கம் நிர்­வகித்து நடத்­தும் பூங்­காக்­க­ளி­லும் கடற்­க­ரை­க­ளி­லும் ஜூன் 25 முதல் 27 வரை 1,500 பேருக்கு எச்­ச­ரிக்­கைக் கடி­தம் கொடுக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, ஹோட்­டல்­கள், விருந்­தி­னர்­களை அணுக்­க­மா­கக் கண்­காணித்து விதிகளை மீறு வோருக்கு எதி­ராக சிங்­கப்­பூர் பயணத்துறைக் கழ­கம் கடு­மை­யாக நட­வடிக்கை எடுக்­கும் என்று தெரி வித்த அமைச்சு, கொவிட்-19 விதி களை மீறாமலும் சுத்தமான பழக் கங்களை கடைப்பிடித்தும் மக்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!