உள்ளூரில் புதிதாக 347 பேருக்கு கொவிட்-19 தொற்று

உள்ளூரில் இன்று (செப்டம்பர் 8) பிற்பகல் நிலவரப்படி புதிதாக 347 பேருக்கு  கோரோனா கிருமி தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புள்ள தொற்றுச் சம்பங்கள், எவ்விதத் தொடர்பும் இல்லாத தொற்றுச் சம்பவங்கள் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு தெரிவிக்கவில்லை. 

புதிதாகக் கிருமி தொற்றியவர்களில் மூவர் 70 வயதுக்கும் அதிகமான முதியவர்கள். அவர்களுக்கு தடுப்பூசி இன்னமும் போடப்படவில்லை அல்லது ஒரு தடுப்பூசி மட்டும் போடப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. இவர்களுக்கு கடும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அது குறிப்பிட்டது. 

இவர்களைத் தவிர வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பேருக்கும் கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இவர்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அல்லது இல்லத் தனிமை உத்தரவில் இருந்தபோது நோய் தொற்றியதாக அமைச்சு கூறியது.

வெளிநாட்டிலிருந்து வந்த இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் 349 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 

சிங்கப்பூரில் கிருமித் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 69,582 ஆக உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!