அறிக்கை: எல்லைக் கட்டுப்பாடு, பயணத் தடையை அகற்ற மலேசியா பரிசீலனை

மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணங்­கள் மீது விதித்­தி­ருந்த தடையை மலே­சியா அடுத்த மாதம் முதல் நீக்­க­வுள்­ள­தாக எதிர்­பார்ப்­பு­கள் நிலவி வரும் வேளை­யில், நாட்­டின் எல்­லை­க­ளைத் திறப்­பது குறித்­தும் அது பரி­சீ­லிப்­ப­தாக மலே­சிய நாளி­த­ழான 'தி ஸ்டார்' தெரி­வித்­துள்­ளது. தேசிய மீட்சி மன்­றத்­தின் தலை­வர் முகை­தீன் யாசின் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ள­தாக அந்த நாளி­தழ் தெரி­வித்­தது.

கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள மலே­சி­யர்­கள் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­வதை அனு­ம­திப்­பது குறித்து அமைச்­சர்­கள் இவ்­வா­ரம் பரி­சீ­லிக்க உள்­ள­னர். அத்­து­டன் மலே­சி­யா­வுக்­குள் சுற்­றுப்­ப­ய­ணி­களை­யும் வர்த்­த­கப் பய­ணி­க­ளை­யும் அனு­மதிப்­பது குறித்­தும் பரி­சீ­லிக்­கப்­படும் என்று நேற்று முன்­தி­னம் மன்­றச் சந்­திப்­புக் கூட்­டத்­திற்­குப் பின் திரு முகை­தீன் தெரி­வித்­தார். இந்த விவ­கா­ரம் பின்­னர் பிர­த­ம­ரி­டம் கொண்டு செல்­லப்­படும் என்­றும் விரை­வில் இது தொடர்­பான அறி­விப்பு வரும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அக்­டோ­பர் மாதத் தொடக்­கத்­துக்­குள் மலே­சி­யா­வில் 90% பெரி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் மன்­றத்­தி­டம் தெரி­வித்­த­தாக திரு முகை­தீன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பகிர்ந்­து­கொண்­டார். இது அக்­டோ­பர் மாத இடை­யி­லேயே மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணங்­களைத் தொடங்­கு­வ­தற்­குத் தோதாக இருக்­கும். இது­வரை, மலே­சி­யா­வில் கிட்­டத்­தட்ட 85% பெரி­ய­வர்­க­ளுக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­டது. இந்­நி­லை­யில், கொவிட்-19 சம்­ப­வங்­கள் மற்­றும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் பயன்­ப­டுத்­தப்­படும் படுக்­கை­க­ளின் விகி­தம் குறித்து கைரி ஜமா­லு­தீன் அளித்­துள்ள தக­வல், தேசிய மீட்சி மன்­றத்­திற்­குத் திருப்­தி­ அளிப்­ப­தாக உள்­ள­தென திரு முகை­தீன் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று மலே­சி­யா­வில் மேலும் 11,332 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது. கடந்த சில நாட்­க­ளாக தின­மும் பதி­வாகி வந்த கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை இறங்­கு­மு­க­மாக இருந்த நிலை­யில், நேற்று மீண்­டும் அதி­க­ரித்­தது. சர­வாக் மாநி­லத்­தில் ஆக அதி­க­மாக 2,358 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!