போலியான ஏஆர்டி முடிவுகளைச் சமர்ப்பித்தால் சிறைத்தண்டனை

போலியான ஏஆர்டி முடிவுகளைச் சமர்ப்பிக்கும் நிறுவனங்களும் ஊழியர்களும் கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

போலிக் யெழுத்து போடுதல், மோசடி, ஏமாற்றுவேலை உள்ளிட்டவற்றுக்காக அவர்கள் குற்றம் சாட்டப்படலாம் என்று வழக்குரைஞர் கோரி வோங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

தாம் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் காட்டும் போலியான கொவிட்-19 சான்றிதழைத் தயாரித்த 30 வயது சீன நாட்டவர் ஸாங் ஷாவ்பெங்கிற்கு கடந்த புதன்கிழமை மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆர்ச்சர்ட் சென்ட்ரலின் ‘டனுக்கி ராவ்’ உணவகத்தில் சாப்பிடுவதற்காக இவர் இவ்வாறு செய்திருந்தார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்டதைக் காட்டும் சக ஊழியர் ஒருவரின் மருத்துவக் குறிப்பை நகலெடுத்து அந்த ஆவணத்திலுள்ள தமது சகாவின் படத்திற்குப் பதிலாக தமது படத்தை ஸாங், இணையச் செயலி ஒன்றின் மூலமாகப் பொருத்திக்கொண்டு கடை ஊழியர்களை ஏமாற்ற முயன்றார். ஆனால் பணியாளர்களில் ஒருவர், சந்தேகமடைந்து போலிசாருக்கு உடனே தகவல் தெரிவித்தார்.

இது சட்டப்படி நிச்சயம் ஏமாற்றுவேலையாகக் கருதப்படும் என்று இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றும் திரு வோங் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!