57 நாடுகளில் ஓமிக்ரான் மருத்துவமனைகளுக்குச் சுமை கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உல­கின் 57 நாடு­களில் கொவிட்-19 உரு­மா­றிய ஓமிக்­ரான் கிருமி தொற்றி இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. கிரு­மித்­தொற்று கூடு­வ­தால் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற வேண்­டிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் வாய்ப்பு உள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் அபா­ய சங்கு ஊதி இருக்­கிறது.

ஓமிக்­ரா­னின் பாதிப்பு எந்த அள­வுக்­குக் கடு­மை­யாக இருக்­கும் என்­பதை மதிப்­பிட மேலும் தக­வல்­கள் தேவை என்று அந்த அமைப்பு தன்­னு­டைய வாராந்­திர தொற்று அறிக்­கை­யில் தெரி­வித்து உள்­ளது.

தடுப்­பூசி மூலம் கிடைக்­கும் பாது­காப்பை அந்­தக் கிருமி குறைத்­து­வி­டுமா என்­ப­தும் இனி­மேல்­தான் தெரி­ய­வர வேண்­டும் என்று அறிக்கை கூறி­யது.

ஓமிக்­ரா­னின் கடுமை டெல்டா கிருமி அள­வுக்கு அல்­லது அதை­விட குறை­வாக இருந்­தா­லும்­கூட, மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்­சை­பெற வேண்­டிய தேவை உள்ள நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கவே செய்­யும். ஓமிக்­ரான் தொற்று கூடும்­போது இது தவிர்க்க முடி­யா­த­தாக ஆகி­விடும் என்று தெரி­வித்த உலக நிறு­வ­னம், தொற்று அதி­க­ரிப்­பிற்­கும் மரண அதி­க­ரிப்­பிற்­கும் இடை­யில் கால இடை­வெளி இருக்­கும் என்­றும் குறிப்பிட்டது.

ஓமிக்­ரான் கிருமி முதன்­மு­த­லாக தென் ஆப்­பி­ரிக்­கா­வில் தலை­தூக்­கி­யது. அந்­தக் கிருமி கவலை தரும் ஒன்று என்று நவம்­பர் 26ஆம் தேதி உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­தது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் டிசம்­பர் 5 வரை யிலான ஒருவார காலத்­தில் ஓமிக்­ரான் தொற்று இரண்டு மடங்­காகி இருக்­கிறது. அங்கு 62,000க்கும் அதி­க­மா­ன­வர்­கள் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இதர ஆப்­பி­ரிக்க நாடு­களில் மிக அதி­க­ள­வில் தொற்று எண்­ணிக்கை கூடி­யுள்­ளது.

அதி­க­மான பரி­சோ­த­னை­கள், குறைந்த தடுப்­பூசி விகி­தம் ஆகி­யவை கார­ண­மாக ஓமிக்­ரான் தொற்று எண்­ணிக்­கை­யில் தாக்­கம் ஏற்­படும் என்­றும் நிறு­வ­னம் குறிப்­பிட்டது.

ஃபைசர் பயோ­என்­டெக் நிறு­வ­னத்­தின் தடுப்­பூசி மூலம் கிடைக்­கும் பாது­காப்­பில் இருந்து ஓமிக்­ரான் கிருமி ஓர­ள­வுக்குத் தப்பி­வி­டும் என்று ஆப்­பி­ரிக்க சுகா­தார ஆய்­வுக் கழ­கத்­தில் உள்ள ஆய்­வ­கம் ஒன்­றின் தலை­வர் அண்­மை­யில் தெரி­வித்து இருந்­தார்.

இத­னி­டையே, ஓமிக்­ரான் கிருமி, உரு­மாறிய இதர கொவிட்-19 கிருமி அள­வுக்கு மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் உயர்­நிலை அறி­வி­யல் வல்­லு­நர்­கள் தெரி­விக்­கிறார்­கள். அதே­போன்றே அமெ­ரிக்­கா­வும் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்டு இருக்­கிறது.

இருந்­தா­லும் ஓமிக்­ரான் பாதிப்பு எந்த அள­வுக்குக் கடு­மை­யாக இருக்­கும் என்­பதை மதிப்­பிட மேலும் ஆய்­வு­கள் தேவைப்­ப­டு­வதாக அறி­வி­யல் அறி­ஞர்­கள் எச்­ச­ரிக்கையுடன் கருத்து தெரிவித்து இருக்­கி­றார்­கள். ஓமிக்­ரான் தொற்றைத் தடுக்­கும் வகை­யில் பல நாடு­களும் மீண்­டும் எல்லைக் கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!